Breaking News

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் ஏற்பட்ட தீவிபத்தில் 4 வயதுச் சிறுவன் பலி : சிறுவனை காப்பாற்ற போராடியவர் தீ காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

4-year-old boy died in Melbourne, Australia fire

மெல்போர்னில் Dandenong பகுதியில் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்த சோக சம்பவம் அரங்கேறி உள்ளது. Leonard தெருவில் உள்ள வீட்டில் இரவு மூன்று குழந்தைகள் உறங்கி விட்ட பின்பு, தாய் சமையலறையில் இருந்த்நிலையில் லாஞ்ச் அறையில் இருந்து புகை வருவதை கண்டு அதி்ச்சி அடைந்துள்ளார்.

4-year-old boy died in Melbourne, Australia fire,.உடனடியாக குழந்தைகளின் தந்தை தீயணைப்பு கருவியை எடுக்க வெளியே ஓடியுள்ளார். இந்த நேரத்தில் இரண்டு குழந்தைகளுடன் தாய் வெளியில் ஓடி வர தீ மளமளவென பரவியுள்ளது. தனி அறையில் தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் கிரித்தீஷ் தீயில் சிக்கி உயிரிழந்தான். குடும்பத்தில் 4 பேர் மற்றும் உறவினர் ஒருவர் என 5 பேர் தீ விபத்தில் இருந்து தப்பிய நிலையில் சுட்டித்தனமான சிறுவன் கிரித்தீஷ் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

செல்லமாக ரித்தீஷ் என அழைக்கப்படும் அவன், மிகவும் சுட்டித்தனமான சிறுவன் என்றும் வளர்ப்பு பிராணிகள் மீது அலாதி பிரியம் கொண்டவன் என்றும் சிறுவனை காப்பாற்ற போராடிய உறவினர் கூறியுள்ளார். விபத்தன்று இரவு தூங்கும் போது கூட பூனைக்குட்டியை தன்னுடன் தூங்க வைத்துக் கொண்டதாகவும் அவனது இழப்பு தங்களை மிகுந்த வேதனைக்கு ஆளாக்கி உள்ளதாகவும் அவர் தெரிவிள்ளார்.

4-year-old boy died in Melbourne, Australia fire.தீ வேகமாக பரவிய போதும் சிறுவனின் தாய், மற்றும் உறவினர் குழந்தையை காப்பாற்ற தீவிரமாக போராடியும் முடியவில்லை. இந்நிலையில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். லாஞ்ச் அறையில் இருந்த Gas Heater -ல் ஏற்பட்ட கசிவே விபத்திற்கு காரணம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் விபத்தில் சிக்கிய தமிழ் குடும்பம் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் இந்த வீட்டிற்கு குடி பெயர்ந்துள்ளனர்.

Link Source: