Breaking News

விக்டோரியாவில் 4 அமைச்சர்கள் பதவி விலகல்- முதல்வர் டேனியல் அறிவிப்பு..!!

விக்டோரியாவின் புதிய துணை முதல்வராக அமைச்சர் ஜெசிந்தா ஆலன் நியமனம்.

4 ministers resign in Victoria - Chief Minister Daniel announces.

கல்வி, சுகாதாரத்துறை, சுற்றுலா, சட்டம் ஒழுங்கு துறைகளுக்கு புதிய அமைச்சர்கள் நியமனம்.

நவம்பரில் விக்டோரியா மாநிலத்துக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், முக்கிய துறைகளை நிர்வகித்து வந்த 4 அமைச்சர்கள் பதவி விலகியுள்ளது. பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளி அன்று துணை முதல்வரும் கல்வித்துறை அமைச்சருமான ஜேம்ஸ் மெர்லினோ, சுகாதாரத் துறை அமைச்சர் மார்டின் ஃபோலி, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு துறை அமைச்சர் லிசா நெவில் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மார்டிக் பகுலா உள்ளிட்டோர் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.

4 ministers resign in Victoria - Chief Minister Daniel announcesவரும் நவம்பர் மாதம் விக்டோரியா மாநிலத்துக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் போட்டியிட 4 அமைச்சர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதையடுத்து அவர்கள் அனைவரும் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. செய்தியாளர்களை சந்தித்த விக்டோரியா மாநில முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ், ஜேம்ஸ் மெர்லினோ, மார்டின் ஃபோலி, லிசா நெவில் மற்றும் மார்டிக் பகுலா உள்ளிட்டோர் தங்களுடைய அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டதை உறுதி செய்தார்.

 

தொடர்ந்து பேசிய அவர், கட்சியினர் கூடி முடிவு செய்ததில் போக்குவரத்து துறை அமைச்சர் ஜெசிந்தா ஆலன் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டுவுள்ளதாக கூறினார். மேலும், சுகாதாரத்துறைக்கு லில்லி டீஅம்போரோஸியோ, சுற்றுச்சூழல் துறைக்கு டேனி பியர்சன், வீட்டு வசதி மற்றும் வேலைவாய்ப்பு துறைக்கு பென் கரோல் மற்றும் கல்வித்துறைக்கு நட்டாலி ஹச்சின்ஸ் உள்ளிட்டோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

முதல்வர், துறை முதல்வர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சேர்ந்து புதிய அமைச்சர்களை தேர்வு செய்துள்ளதாக கூறினார். அவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறுவதாக அவர் கூறினார்