Breaking News

39 வயது ஆண் மீது கொலை வழக்கு !

தெற்கு சிட்னியில் ஒரு வீட்டின் driveway-ல், பக்கத்தில் குடியிருப்போர்களால் ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக 39 வயது ஆண் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

39 வயதுடைய Lynda Greenwood-ஐ என்ற பெண்மணியை காப்பாற்ற அருகில் இருந்த குடியிருப்பவர்கள் கடும் முயற்சி எடுத்துள்ளனர்.. பலத்த காயங்களுடன் அவரது உடல் இருந்ததாகவும் கூறுகின்றனர் . Como Cremona சாலையில் உள்ள ஒரு வளாகத்தில் அவர் செவ்வாய் நள்ளிரவு 12:30 மணிக்கு உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது.

39 வயதுடைய ஒரு ஆண் கடந்த இரண்டு ஆண்டுகளாக Ms Greenwood உடன் மீண்டும் மீண்டும் உறவில் இருந்ததாக சாட்சியங்கள் கூறியதாக காவல் துறை தெரிவித்தது.

“கடந்த இரண்டு ஆண்டில் இந்த இருவரும் தொடர்ந்து உறவில் இருந்ததை என்னால் உறுதிபடுத்த முடியும் என்று Police Area Commander Detective Superintendent Jason Box தெரிவித்தார்.

இந்த நபர் செவ்வாய் காலை 9:30 மணிக்கு சிட்னியின் தெற்கில் சில்வேனியாவில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டு சதர்லேன்ட் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு அவர் மீது கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டது.அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.புதன்கிழமை சதர்லேண்ட் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்ற தகவலும் வெளிவந்து உள்ளது.