Breaking News

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் ஒரே நாளில் 38ஆயிரத்து 625 பேருக்கு தொற்று பாதிப்பு : 11 பேர் உயிரிழந்த நிலையில் மீண்டும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த ப்ரீமியர் Dominic Perrottet திட்டம்

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கோவிட் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடனான அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

38,625 people infected in a single day in New South Wales. Premier Dominic Perrottet plans to tighten controls again after 11 deathsஇந்த கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரீமியர் தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக மாகாணத்தில் மேலும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார். நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் ஒரே நாளில் 38 ஆயிரத்து 625 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 11 பேர் உயிரிழந்து விட்டதாகவும் அக்டோபர் மாதத்தில் ஒன்பது பேர் உயிரிழந்ததே அதிகபட்ச ஒருநாள் உயிர் இழப்பாக இருந்தது.

இந்நிலையில், அதனை முறியடிக்கும் வகையில் உயிரிழப்பு பதிவாகி வருவதாகவும் ப்ரீமியர் குறிப்பிட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் 134 பேர் வரை அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வந்தாலும் தற்போது டெல்டா வகை வைரஸ் பாதிப்பு அதிக அளவில் பதிவாகி வருவதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மருத்துவக் கட்டமைப்பில் தொய்வு ஏற்படாமல் உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கான அறிவுரைகரளை சுகாதாரத்துறைக்கு வழங்கியதாகவும் ப்ரீமியர்
Dominic Perrottet கூறியுள்ளார்.

38,625 people infected in a single day in New South Wales. Premier Dominic Perrottet plans to tighten controls again after 11 deaths..தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி சுகாதாரத்துறை தனது மருத்துவ கொள்கைகள் சிலவற்றை மாற்றி அமைத்துள்ளது. அந்த வகையில் அறிகுறிகள் தென்பட்டு கட்டாய மருத்துவ உதவி தேவைப்படும் நபர்கள் மட்டுமே மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட வேண்டும் என்றும், தேவையின்றி நீண்ட வரிசையில் காத்திருந்து தொற்று பரவ வழிவகுக்கும் வகையில் செயல்படக் கூடாது என்றும் அறிவுறுத்தல்களை சுகாதாரத்துறை வழங்கியுள்ளது.

தொற்று பாதிப்பு பதிவான நபர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என்றும், அவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ப்ரீமியர் Dominic Perrottet தெரிவித்துள்ளார்.

50 வயது முதல் 90 வயது வரையிலான 5 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் உட்பட 11 பேர் தொற்று காரணமாக உயிரிழந்திருப்பதாகவும், பலி எண்ணிக்கை அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் 23 வயது பளு தூக்கும் வீரர் மற்றும் விஞ்ஞானி ஒருவரும் பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Link Source: https://ab.co/3F7eoy5