Breaking News

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் சமூகப் பரவல் மூலமாக மேலும் 344 பேருக்கு தொற்று உறுதி : இருவர் உயிரிழந்த நிலையில் ஊரடங்கு மேலும் நீட்டித்து ப்ரீமியர் உத்தரவு

டெல்டா வகை வைரஸ் பாதிப்பு மிக தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 344 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக் கொள்ளாத 90 மற்றும் 30 வயதுடைய இருவர் உயிரிழந்த நிலையில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கொரொனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.

344 more infected as community spread in New South Wales. Premier orders extension of curfew.தொற்று உறுதி செய்யப்பட்ட 344 பேரில் 65 பேர் அறிகுறிகளுடன் நடமாடி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து Dubbo பகுதியில் ஒரு வார காலத்திற்கு முடக்க நிலை நீட்டிக்கப்பட்டுள்ளது. மிக மோசமாக பரவிவரும் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் பிரீமியர் Gladys Berejiklian கேட்டுக்கொண்டுள்ளார். Fairfield, Canterbury-Bankstown, Liverpool, Blacktown, Cumberland Parramatta, Campbelltown மற்றும் Georges River ஆகிய ஊரகப் பகுதிகளில் இருந்து அனுமதிக்கப்பட்ட பணியாளர்கள் மட்டும் வெளியேறுவதற்கு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

344 more infected as community spread in New South Wales. Premier orders extension of curfew..நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் Greater Sydney, Blue Mountains, Central Coast, Wollongong மற்றும் Shellharbour பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முடக்கநிலை ஆகஸ்ட் 28ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 6 மில்லியன் தடுப்பூசிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் விரைவில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நான் வைரஸ் பாதிப்பிலிருந்து மீள முடியும் என்றும் ப்ரீமியர் Gladys Berejiklian குறிப்பிட்டுள்ளார் .

மேலும் தேவையின்றி வெளியில் செல்வது நண்பர்களின் வீடுகளுக்கு செல்வது உள்ளிட்டவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்றும் ப்ரீமியர் அறிவுறுத்தியுள்ளார்.

Link Source: https://ab.co/3seymCb