நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் Bondi Cluster மூலமாக 11 பேருக்கு தோற்று உறுதியான நிலையில் இரண்டு வாரம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு அமலுக்கு வந்த முதல் நாளிலேயே 30 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே உடன் Bondi Cluster உடன் தொடர்புடையவர்கள் என்றும் இதில் 11 பேர் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள் என்றும் நியூ சவுத் வேல்ஸ் பிரிமியர் Gladys Berejiklian கூறியுள்ளார்.
புதிதாக தொற்று பாதிப்பு அவர்களின் எண்ணிக்கை வரும் நாட்களில் மேலும் உயரக்கூடும் என்றும் மிகவும் ஆபத்தான உருமாற்றம் அடைந்த டெல்டா வகை வைரஸ் தற்போது பரவி வருவதாகவும் ப்ரீமியர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலமாக வந்தவர்களில் இருவர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாகவும், அவர்கள் இருவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
Greater Sydney, Blue Mountains, Central Coast, Wollongong, Shellharbour பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு வீட்டிலேயே இருக்குமாற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் விரைவில் தொற்று பாதிப்பு கட்டுக்குள் வரும் என்றும் பிரீமியர் Gladys Berejiklian தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் 52 ஆயிரத்து 28 பரிசோதனைகள் செய்யப்பட்டிருப்பதாகவும், தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களுக்குச் சென்று வந்தவர்கள் தொடர்பு பட்டியலில் இருப்பவர்கள் லேசான அறிகுறிகள் தென்பட்டாலும் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுமாறு பிரிமியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அடி நேரத்தில் 14 நாட்கள் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியில் வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேவையின்றி வெளியில் சுற்றி தெரிந்தவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.
கட்டுப்பாடுகளை மதித்து நடக்க வேண்டும் என்றும் அதனை மீறுவோர் அபராதம் செலுத்துவது மட்டுமன்றி தண்டனைக்கு ஆளாவார்கள் என்றும் நியூ சவுத் வேல்ஸ் காவல் ஆணையர் Gary Worboys கூறியுள்ளார்.
Link Source: https://ab.co/3x1yA15