Breaking News

Northern Territory -ன் Katherine பகுதியில் 26 வயது நபர் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் : கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட 38 வயது நபர் பாதுகாப்பு காரணங்களால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவில்லை

26-year-old man shot dead in Katherine area of ​​Northern Territory. 38-year-old man charged with murder failed to appear in court for security reasons

Northern Territory ன் Katherine பகுதியில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ள Cutta Cutta குகை பகுதியில் 26 வயது மதிக்கத்தக்க நபர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் இழந்து கிடப்பதாகவும், அந்த நபர் குறித்த விவரங்களை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டது.

அந்தப்பகுதியில் உள்ள சொத்து குறித்து இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் இவர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. 26 வயது பூர்வகுடி நபரை துப்பாக்கியால் சுட்ட குற்றத்திற்காக 38 வயதான Kim Kellett
என்பவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் அவரை தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

26-year-old man shot dead in Katherine area of ​​Northern Territory. 38-year-old man charged with murder failed to appear in court for security reasons.இந்நிலையில் அந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்ட நிலையில் அவருக்கு பிணை கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த முடியாது என்று Prosecutor தரப்பு வழக்கறிஞர் தெரிவித்து விட்டதால் குற்றம் சாட்டப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவில்லை. அதே நேரத்தில் பாதுகாப்பு பிரச்சனைகள் குறித்து உரிய விளக்கத்தை வழக்கறிஞர் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதேநேரத்தில் சம்பவம் நடந்த Cutta Cutta குகை பகுதியில் புலனாய்வு காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள தடயங்களை சேகரித்து விசாரணையை நடத்தி வருகின்றனர்.

பூர்வ குடியைச் சேர்ந்த 26 வயதான நபர் கொலை செய்யப்பட்டதற்கான முழுமையான காரணங்கள் எதுவும் இதுவரை நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படவில்லை என்றும், சம்பவ இடங்களில் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சொத்து குறித்த தகராறில் இந்த கொலை நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டார்வின் நீதிமன்றத்தில் இந்த மாதத்தில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வரும் என்றும் அப்போது பிணை மனு விசாரிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் குற்றம் சாட்டப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அதற்கான உரிய காரணத்தையும் தெரிவிக்க வேண்டும் என்றும் பாதுகாப்பு காரணங்கள் குறித்து காவல்துறையினரிடம் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Link Source: https://ab.co/3D0C47P