Breaking News

Northern Territory -ன் Katherine பகுதியில் 26 வயது நபர் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் : கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு 36 வயது நபர் கைது செய்யப்பட்ட நிலையில் போலீசார் தீவிர விசாரணை

26-year-old man shot dead in Katherine area of ​​Northern Territory. 36-year-old man arrested on suspicion of murder

Northern Territory ன் Katherine பகுதியில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ள Cutta Cutta குகை பகுதியில் 26 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரின் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அங்கு விரைந்து சென்று காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் இழந்து கிடப்பதாகவும், அந்த நபர் குறித்த விவரங்களை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டது.

அந்தப்பகுதியில் உள்ள சொத்து குறித்து இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் இவர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த குற்றத்திற்காக 36 வயது நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் அவரை தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் உடலில் உள்ள துப்பாக்கி குண்டு காயங்கள் குறித்து விரிவான அறிக்கை கிடைத்த பின்னர் விவரங்கள் தெரியவரும் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

காவல் துறைக்கு கிடைத்த அழைப்பின் அடிப்படையில் அங்கு சடலம் கண்டெடுக்கப்பட்டதாவும், விசாரணையின் அடிப்படையில் இந்த நபர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் விசாரணை முடிவடைந்த பின்னர் இவர் Katherine நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் படுவார் என்றும் புலனாய்வு பிரிவு காவல் அதிகாரி Sergeant Jakson Evans கூறியுள்ளார்.

அதே நேரத்தில் உயிரிழந்த நபர் குறித்த விவரங்கள் யாருக்கேனும் தெரிந்தால் அவர்கள் காவல்துறையில் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் Northern Territory போலீசார் தெரிவித்துள்ளனர்.

Link Source: https://ab.co/3N5I57Z