Breaking News

சிலியில் 25 மீட்டர் அகலம், 200 மீட்டர் ஆழத்துக்கு ஏற்பட்ட திடீர் ‘புதை குழி’..!!

சிலியிலுள்ள தாமிர சுரங்கத்துக்கு அருகே திடீரென ஏற்பட்ட புதைகுழி குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

25 meters wide, 200 meters deep sudden 'burial pit' in Chile

தலைநகர் சாண்டியாகோவில் இருந்து வடக்கே 665 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அல்காபரோசா. அங்கு இயங்கி வரும் தாமிர சுரங்கத்துக்கு அருகே 25 மீட்டர் அகலமுள்ள புதை குழி திடீரென ஏற்பட்டது.

இதனால் அல்காபரோசா மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள், புதை குழியைச் சுற்றிலும் பாதுகாப்பு ஏற்படுத்தினர். அதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் வந்தனர். அருகேவுள்ள தாமிர சுரங்கத்தால் புதை குழி ஏற்பட்டிருக்கக்கூடுமோ என்கிற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய சுரங்கத் துறை பணியாளரும் புவியியல் ஆய்வாளருமான
டேவிட் மொன்டெனெக்ரோ, சுமார் 200 கி.மீ ஆழத்துக்கு குழி ஏற்பட்டுள்ளது. குழிக்குள் எந்தப் பொருளையும் கண்டறியப்படவில்லை. ஆனால் நீரோட்டம் உள்ளது என்றார்.

கனடாவைச் சேர்ந்த லுண்டின் மைனிங் என்கிற நிறுவனம் அல்காபரோசாவில் தாமிர சுரங்கத்தை நிறுவியுள்ளது. திடீரென புதை குழு ஏற்பட்டுள்ளதால் சுரங்கப் பகுதிகளில் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது என்றும், பணியாளர்கள், உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.