2032 ஒலிம்பிக் மகூறும் பாராலிம்பிக் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெறும் என்பதை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். டோக்கியோவில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் கிடைக்கப்பெற்ற ஓட்டுகளின் அடிப்படையில் பிரிஸ்பேன் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
குயின்ஸ்லாந்து ப்ரீமியர் Annastacia Palaszczuk, பிரிஸ்பேன் லார்ட் மேயர் B Adrian Schrinner மற்றும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர Richard Colbeck ஆகியோர் டோக்கியோவில் நடைபெற்ற சந்திப்பில் பங்கேற்றிருந்த நிலையில், பிரிஸ்பேன் தேர்வு செய்யப்பட்டதாக Thomas Bach அறிவித்ததும் எழுந்து நின்று உற்சாகத்துடன் கை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பிரிஸ்பேன் மக்கள் பட்டாசு வெடித்து தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
ஆஸ்திரேலி ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் மற்றும் இங்கிலாந்து பிரீமியர் ஆகியோர் பிரிஸ்பேன் 2032 ஒலிம்பிக் போட்டிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
தன்னுடைய நாட்டிற்கும் நாட்டு மக்களுக்காகவும் தான் மிகவும் பெருமையாக உணர்வதாக உன் வாழ்நாளில் இந்த நாளை என்னால் மறக்க முடியாது என்றும் குயின்ஸ்லாந்து பிரீமியர் Palaszczuk தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் பிரிஸ்பேனை ஒப்படைத்த பின்னர், பிரிஸ்பேனில் இந்த விளையாட்டுகளை நடத்த எங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததில் எங்கள் அரசாங்கம் பெருமிதம் கொள்கிறது. இந்தத் தொடர் மிகவும் பிரமாண்டமாக இருக்க நாங்கள் சிறந்த முறையில் ஏற்பாடு செய்வோம். ஒலிம்பிக் போட்டிகள் எவ்வாறு ஒழுங்கமைக்கப்படுகின்றன என்பது எங்களுக்குத் தெரியும் எனக் கூறினார்.
சந்திப்பில் பங்கேற்று இருந்த என்பது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர்களை 72ல் இருந்து 75 பேர் பிரிஸ்பேனை தேர்ந்தெடுத்து வாக்களித்ததாக கூறப்பட்டுள்ளது.
ஆத்திரேலியாவின் பிரிஸ்பேனில் 2032 ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளுக்காக அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் செய்யப்படும் என்று ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் மற்றும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர், குயின்ஸ்லாந்து பிரீமியர் ஆகியோர் அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் 1956 ஆம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளும் பின்னர் 2000ஆம் ஆண்டு சிட்னியில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது.
Link Source: https://ab.co/3zpb9zq