Breaking News

2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு- ஆஸ்திரேலியர்கள் பன்முகத்தன்மை விரும்பும் பகுத்தறிவாதிகள்..!!

மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவின் படி, ஆஸ்திரேலியர்கள் பலரிடையே சமய ஈடுபாடு குறைந்துள்ளது என்றும் பன்நாட்டு பண்பாட்டு நெறிகளை கொண்ட நாடாக ஆஸ்திரேலியா திகழ்வதும் தெரியவந்துள்ளது.

2021 Census- Australians Rationalists Want Diversity

ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகம் 2021-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், நியூசிலாந்து மற்றும் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியர்கள் பலரும் ஆஸ்திரேலியாவில் அதிகளவில் இடம்பெயர்வது தெரியவந்துள்ளது.

ஆங்கிலத்திற்கு அடுத்தப்படியாக பஞ்சாபி அதிகம் பேரால் பேசப்படும் மொழியாக உள்ளது. மூன்றாவது இடத்தில் மேண்ட்ரின் மற்றும் நான்காவது இடத்தில் அரபிக் மொழிகள் இடம்பிடித்துள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் 2.02 மில்லியன் மக்கள் ஆஸ்திரேலியாவில் இருந்தனர்

கடந்தாண்டுக்கான கண்கெடுப்பில் அது 8.6 சதவீதம் உயர்ந்து 25.5 சதவீத மக்கள் ஆஸ்திரேலியாவில் உள்ளனர். ஆஸ்திரேலியர்களில் பாதி மக்கள்தொகையினரின் பெற்றோர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 27.6 சதவீதத்தினர் மற்ற நாடுகளில் பிறந்தவர்களாக உள்ளனர்.

மேலும் ஆஸ்திரேலியாவில் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றுவோர் 43.9 சதவீத மக்கள். அவர்களை தொடர்ந்து 40 சதவீத மக்கள் மதங்களை துறந்தவர்களாக உள்ளனர். அதே சமயத்தில் ஆஸ்திரேலியாவில் இஸ்லாம் மதத்தை பின்பற்றுவோரின் எண்ணிக்கை கடந்த 2016 கணக்கெடுப்பை விட 3.2 சதவீதம் உயர்ந்து 813,392 பேராக உள்ளது.

ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய மக்கள் தொகையில் 2.7 சதவீதத்தினர் இந்து மதத்தை பின்பற்றுகிறார்கள். அவர்களுடைய எண்ணிக்கை 684002-ஆக உள்ளது. இதன்மூலம் ஆஸ்திரேலியாவில் வளர்ந்து வரும் பன்முகத்தன்மையை காட்டுகின்றன. மேலும் இது சமூகம் மற்றும் மக்கள் அமைப்புகளிலும் தொடர்ச்சியாக மாற்றத்தை காட்டுகின்றன.