Breaking News

2020 கூட்டாட்சி பட்ஜெட் திருப்தி அளிக்கவில்லை என்று மாணவர்கள் கருத்து !

2020 கூட்டாட்சி பட்ஜெட் திருப்தி அளிக்கவில்லை என்று மாணவர்கள் கருத்து !

கூட்டாட்சி பட்ஜெட் ஆஸ்திரேலிய இளைஞர்களின் வேலை வாய்ப்பை கருத்தில் கொண்டு Apprentice மற்றும் traineeships-காக 1.2 பில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. வணிக முதலாளிகள் 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்க Job Maker மானிய திட்டம் உதவும்.

ஆனால் இத்திட்டம் தங்களை புறக்கணிப்பதாக, 12 ஆம் ஆண்டு மாணவர் Ella Avni தெரிவித்துள்ளார்.இந்த பொருளாதார சிக்கல் நிறைந்த பேரிடர் காலத்தில் Green Recovery-க்கான நிதி உதவி பற்றி எந்த அறிவிப்பும் இல்லாதது காலநிலை ஆர்வலர்களுக்கு ( climate Activist) அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

John Frydenberg செவ்வாய் அன்று தாக்கல் செய்த இரண்டாவது பட்ஜெட்டில், தட்பவெட்ப மாறுதலை சமாளிக்க 1.9 பில்லியன் டாலர்கள் low emissions Technologies-காக நிதி ஒதுக்கியுள்ளனர் . 2029 ஆம் ஆண்டு இழுத்து மூடப்படும் என்று எதிர்பார்த்த Vales Point நிலக்கரி மின் உற்பத்தி ஆலைக்கு 8 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்ட்து பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

தேசிய பூங்காக்களை புனரமைத்து வனவிலங்குகளை, காட்டுத் தீ போன்ற இடர்களில் இருந்து காக்க, 1.8 பில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.Australian Community Climate and Earth System simulator-ஐ புனரமைக்க 7.6 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இத்திட்டங்கள போதுமானதாக இல்லை renewable energy-க்காக பொது நிதி ஒதுக்கப்படவில்லை என்று School Strike For Climate ஒருங்கிணைப்பாளர் Avni தெரிவித்துள்ளார்.இதனால் பெரும் வேலை வாய்ப்பு இழப்பு ஏற்படும். நாட்டிற்கு கிடைக்கும் பொருளாதார வளர்ச்சி தடைபடும் என்று கருதுகின்றனர்.

தற்போது ஆஸ்திரேலியா கடும் பொருளாதார சிக்கலில் இருக்கிறது. 213.7 பில்லியன் டாலர் குறைபாடும், 703 பில்லியன் டாலர்கள் கடனும் இந்த நிதி ஆண்டில் இருப்பதாக இந்த பட்ஜெட் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் Green recovery வேலைவாய்புகளை அதிகரித்து பொருளாதாரத்தை உயர்த்த உதவும்.

ஆனாலும் இந்த பட்ஜெட்டில் சில நல்ல விஷயங்களும் இருப்பதாக Professor Howden தெரிவித்துள்ளார்.
Marine Reserve, Ocean Efforts, Pollution மற்றும் Ghost Netting பற்றிய அறிவிப்புகள் நன்றாக இருப்பினும் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்று அவர் தனது கருத்தை முன்வைத்து உள்ளார் .