Breaking News

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் புதிய உச்சமாக 1218 பேருக்கு வைரஸ் பாதிப்பு : 6 பேர் உயிரிழந்ததால் தொடரும் அச்சம்

1218 people infected with the virus in the new state of New South Wales in Australia. fears that 6 people will die

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1218 பேர் டெல்டா வகை வைரசுக்கு ஆளாகியுள்ள நிலையில், 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஒரே நாளில் ஆயிரத்திற்கும் அதிகமாக தொற்று பாதிப்பு உறுதியாவது இது இரண்டாவது நாள் ஆகும்.

தொற்று உள்ளவர்களில் 887 பேர் சிட்னியின் மேற்கு மற்றும் தென்மேற்கு சிட்னியில் வசிப்பவர்கள். தொற்றினால் ஆறு பேர் இறந்துள்ளார்கள். தொற்றினால் இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை 145ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 70 வயது முதல் 80 வயது வரை இருந்த முதியவர்கள் சிலர் இன்னும் முழுவதுமாக தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத நிலையில் வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக நியூ சவுத் வேல்ஸ் ப்ரீமியர் Gladys Berejiklian கூறியுள்ளார்.

மாகாணத்தில் 70 சதவீத மக்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான பாதி தூரத்தை கடந்து விட்டதாக ப்ரீமியர் குறிப்பிட்டுள்ளார். சனிக்கிழமை வரை 8 கோடியே 34 லட்சம் பேர் தங்களது முதல் டோஸ் தடுப்பு ஊசியை எடுத்துக்கொண்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

1218 people infected with the virus in the new state of New South Wales in Australia. fears that 6 people will die.தடுப்பூசி போட முன் வருபவர்கள் அனைவரையும் தான் பாராட்டுவதாகவும், அனைவரும் காலதாமதம் இன்றி தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வரவேண்டும் என்றும் ப்ரீமியர் Gladys Berejiklian கேட்டுக்கொண்டுள்ளார். இதனிடையே சிட்னியின் Parklea சிறையில் 31 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறையில் இருந்த அவரை சந்திப்பதற்காக பார்வையாளராக வந்த ஒருவர் மூலமாக தோற்றம் பரவல் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் மூலமாக சிறையில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனடிப்படையில் அனைவருக்கும் பரிசோதனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனிடையே மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது. தற்போது 126 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கான உரிய கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. இதனிடையே போதுமான படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர்.

Link Source: https://bit.ly/3zzSTUM