Breaking News

100 வருடம் நிறைவடைந்த ஆஸ்திரேலியன் Air Force

இதைக் கொண்டாடும் விதமாக ஆஸ்திரேலியா கடந்த மற்றும் நிகழ்கால உறுப்பினர்களை இதற்கு மரியாதை செலுத்தும் விதமாக canberra-வில் 60க்கும் மேற்பட்ட விமானங்களை வானில் பறக்க விட்டனர். இதில் பறந்த விமானங்கள் Super Harnet, Black Hawk helicopter, C-130 Hercules, MH 60R seahawk Boomerang, Spitfire மற்றும் Canberra Bomberரும் அடங்கும்.

இந்த பெரிய அளவிலான நிகழ்வு 1921 முதல் ஆஸ்திரேலிய விமானப்படையில் பல போராட்டங்களை சந்தித்தது, உயிர் தியாகம் செய்தவர்களை நினைத்து பார்த்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக இருந்தது. காலை 10:30 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விமானம் Burley Griffin ஏரியைக் கடந்து சென்றது.

இதை Canberria மக்கள் பல இடங்களில் நின்று ரசித்து பார்வையிட்டனர். இதில் மிகவும் பழமை வாய்ந்த ஒற்றை இருக்கையை கொண்ட Spitfire விமானமும் இருந்தது. இது 1942 – 1945ல் இரண்டாம் உலகப்போரின் போது RAAF ஆல் Moratai Island மற்றும் வடஆஸ்திரேலியாவில் உபயோகப்படுத்தப்பட்டது.

Lockhead Hudosn என்ற விமானமும் இதில் இடம் பெற்றது. இந்த விமானப்படையில் இதுவரை 11,100க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் உயிரைத் தந்துள்ளனர், 350,000 மேல் பணியாற்றியுள்ளனர்.இந்த விழாவில் காலையில் கவர்னர் General David Hurley ராணியின் நினைவாக ஒரு புதிய Regimental கொடி வண்ணத்துடன் தொடங்கினார்.

இது போராட்டங்களில் பயன்படுத்தபடவில்லை என்றாலும் பதவியில் இருந்தவர்களை கௌரவபடுத்துவதையும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இருந்தது.இதற்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது. இந்த புதிய வண்ணத்தை பெற்றுக் கொள்ள பழங்குடியின Flying Officer Coomara Munro தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைப் பற்றி அவர் கூறும்போது இந்த வாய்ப்பை தனக்கு வழங்கியதற்காக பெருமைபடுவதாகவும் கூறினார்.

Mr. Hurley 2019-20ம் ஆண்டின் போது Bushfire ஆல் ஏற்பட்ட போது Reaf விமானம் ஆற்றிய உதவியை மறக்க முடியாது என்றார்.
Morrison அவர்கள் இதில் தன்னுயிரை நீத்தவர்களின் தைரியம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை நாங்கள் மதிக்கிறோம். மேலும் இதில் உயிர்நீத்த 11,000 உறுப்பினர்களை நினைவு கூறும் விதமாக அவர்களின் பெயர் Australia War Memorials Roll-ல் இடம்பெறும் என்றார்.

Link Source: abc.net.au