Breaking News

விக்டோரியா அனைத்து NSW க்கும் எல்லைகளை மூடியது..முகக்கவசமும் கட்டாயம் !

வியாழன் கிழமை அன்று 3 புதிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், விக்டோரியா அரசு விதிகளில் சில மாற்றம் கொண்டு வந்துள்ளது .விக்டோரியா அனைத்து NSW க்கும் தனது எல்லைகளை மூடியது.

இதுகுறித்து ஊடகங்களுக்கு Acting Premier Jacinta Allan அறிவிப்புகளை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.வெளிமாநிலங்களில் இருந்து வரும் அனைவருக்கும் 24 மணி நேரத்திற்குள் பரிசோதனையும், 14 நாட்கள் தனிமைப்படுத்துதலும் அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.

ACT குடியிருப்பாளர்கள் விக்டோரியாவிற்குள் செல்ல முன்பதிவு செய்தல் அவசியம்.இதற்கு முன்னர் சிட்னி, Northern beaches போன்ற இடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு இருந்தது.வியாழக்கிழமையன்று கண்டறியப்பட்ட இரண்டு புதிய வழக்குகள் ,அந்த நள்ளிரவில் 5 ஆக உயர்ந்தது, அதில் மூன்று பேர் Melbourne suburbs of Mitcham, Hallam and Mentone போன்ற இடங்களில் இருந்து வந்தவர்கள் ,அவர்களுக்கு புதன்கிழமையன்று தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுவரை வீடுகளில் 30 பேர் வரை ஒன்று கூடலாம் என்று கூறப்பட்டிருந்தது ஆனால் அது தற்போது 15 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தனது வீட்டை தவிர வெளியே செல்லும் அனைவருக்கும்,மற்றும் வேறிடங்களில் கூடும் அனைவரும் முகக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த திடீர் மாற்றங்களுக்காக MS Allen மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால் இந்த மாற்றங்கள் கட்டாயம் தேவை என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.டிசம்பர் 21ஆம் தேதி அன்று blackrock -இல் உள்ள smile buffalo Thai restaurant-க்கு சென்று வந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளும் படியும் தனிமைப்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள 2 தொற்றுகளும் பெண்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அதில் ஒருவருக்கு 40 வயதும் மற்றவருக்கு 70 வயது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள 20 வயது பெண்ணைத் தவிர, கடந்த 61 நாட்களாக எந்த ஒரு உள்ளூர் தொற்றுக்களும் விக்டோரியாவில் கண்டறியப்படவில்லை. இருந்தாலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

புது வருட கொண்டாட்டத்தின் போது பட்டாசு வேடிக்கைகளையும், கொண்டாட்டத்தையும் காண அரை மில்லியன் பார்வையாளர்கள் வரை ஒன்று கூடுவார்கள் ஆனால் தற்போது இந்த கொண்டாட்டத்தில் முடக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .