Breaking News

விக்டோரியாவின் நான்கு புதிய கொரோனா தொற்றில், 2 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் வீரர்கள் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது !

தொடர்ந்து 13வது நாளாக விக்டோரியாவில் எந்த ஒரு உள்ளூர் தொற்றும் பதிவாகவில்லை .செவ்வாய் கிழமை அன்று உறுதி செய்யப்பட்ட 4 தொற்றுகளும் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.அதில் மூவர் grand slam நகர தொற்றில் தொடர்புடையவை என்று கூறப்பட்டுள்ளது .இருவர் விளையாட்டு வீரர்கள் என்பதும் ,மற்றுமொருவர் பங்கேற்பாளர் என்று விக்டோரியாவின் தலைமை சுகாதார அதிகாரி Brett Sutton தெரிவித்தார்.ஒருவர் 20 வயது பெண் ,இருவர் 30 வயதில் ஆண்கள்.

தற்போது மாநிலத்தில் செயலில் உள்ள தொற்றுநோய்களின் எண்ணிக்கையை 34இல் இருந்து 1 அதிகரித்து உள்ளது.ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்றவர்களில் 72 வீரர்களில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பகுதியினர் Abu Dhabi, Doha மற்றும் Los Angelesஇருந்து மெல்போர்னுக்கு மூன்று charter விமானங்களில் தோற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் .

பாதிக்கப்பட்ட வீரர்கள் இன்னும் தங்கள் அறைகளில் இருந்து பயிற்சிக்காக வெளியேற முடியவில்லை என்று Professor Sutton தெரிவித்தார் .Melbourne Open-னுக்கு வந்த 1,200 பேருக்கும் வைரஸ் அபாயம் இருப்பதாக Prof.Sutton எச்சரித்துள்ளார் .மேலும் வரப்போகும் நாட்களில் சில தொற்றுகள் வெளிவரக்கூடும் என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், சிட்னியின் 35 உள்ளூராட்சி பகுதிகளில் 25 விக்டோரியாவின் “traffic light” permit system அமைப்பின் பகுதியாக திங்கள்கிழமை மாலை 6 மணி முதல் சிவப்பு மண்டலத்திலிருந்து ஆரஞ்சு மண்டலங்களாக மாற்றப்பட்டது . Blue Mountains மற்றும் Wollongong ஆகியவைகளும் சிவப்பு நிறத்தில் இருந்து ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றப்பட்டது .

NSW- விக்டோரியா எல்லையில் உள்ள 16 உள்ளூர் அரசாங்கப் பகுதிகள் ஆரஞ்சு நிறத்தில் இருந்து பச்சை நிறமாக மாற்றப்பட்டது.இதன் மூலம் கட்டுப்பாடற்ற எல்லை நுழைவுக்கு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .ஆரஞ்சு மண்டலத்திலிருந்து பயணிக்கும் மக்கள் இன்னும் ஆன்லைனில் அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும் மற்றும் விக்டோரியாவுக்கு வந்த அனைவரும் 72 மணி நேரத்திற்குள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், எதிர்மறையான முடிவைப் பெறும் வரை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது .

செவ்வாய்க்கிழமை மதியம் முதல் 24 மணி நேரத்தில், 25,956 அனுமதி விண்ணப்பங்கள் செயல்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது .Greater Brisbane இந்த வார இறுதிக்குள் சிவப்பு நிறத்தில் இருந்து ஆரஞ்சு வரை குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது .சிட்னி உள்ளூர் அரசாங்கப் பகுதிகள் Blacktown, Burwood, Canada Bay, Canterbury-Bankstown, Cumberland, Fairfield, Inner West, Liverpool, Parramatta மற்றும் Strathfield ஆகியவை தற்போது சிவப்பு மண்டலங்களாக இருக்கின்றன.இந்த பத்து பகுதிகளும் Sydney’s Berala cluster-ருடன் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது .