Breaking News

வன்முறையை தூண்டும் வித‌த்தில் கருத்துகளை வெளியிட்டதால், டொனால்ட் டிரம்ப் ட்விட்டரில் இருந்து நிரந்தரமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் !

டொனால்டு டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் , வன்முறையை தூண்டும் வித‌த்தில் கருத்துகளை வெளியிட்டதால் டிரம்ப் கணக்கை நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

டிரம்ப்பின் twitter கணக்கு முடக்கப்பட்டதால், POTUS-ன் twitter கணிக்கில் இருந்து, எதிரிகளுடன் சேர்ந்து twitter நிறுவனமும் என்னை பேசவிடாமல் அமைதிப்படுத்தி, எனக்கு ஓட்டு போட்ட மக்களாகிய உங்களையும் என்னையும் தடுப்பதாக டிரம்ப் பதிவிட்டு இருந்தார். இதையடுத்து அந்த பதிவும் நீக்கப்பட்டது.

twitter-இல் டிரம்ப் பதிவிட்ட தேர்தல் குறித்த ட்விட்டுகளால் தான் அவரது ஆதரவாளர்களால் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வன்முறை ஏற்பட்டுள்ளது, எனவே தான் அவரது twitter கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளது என twitter நிறுவனம் தெரிவித்துள்ளது.

twitter கணக்கில் அனைவரும் அவரவர் கருத்தை சுதந்திரமாக கருத்துகளை பதிவிட தான் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் twitter கணக்கில் வன்முறை தூண்டும் விதத்தில் கருத்துக்களை பதிவிட்டால் கண்டிப்பாக கணக்குகள் முடக்கப்படும், என twitter நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், டிரம்ப் பதிவிட்ட இரண்டு பதிவும் வன்முறையை தூண்டுவதாக இருந்துள்ளது. இந்த பதிவுகளால் ஏற்பட்ட வன்முறையின் காரணமாக தான் ஐந்து பேர் உயிரிழந்துள்ளார் என twitter நிறுவனம் கூறியுள்ளது. மேலும் டிரம்ப் தனது மற்றொரு பதிவில், ஜோ பைடன் பங்கேற்கும் விழாவில் தான் கலந்து கொள்ள மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார். இந்த பதிவும் பிரச்சனையை தூண்டும் விதத்தில் இருக்கிறது எனவும் twitter நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில், டிரம்ப்பின் முக்கிய ஆதரவாக இருக்கும் former national security advisor Michael Flynn மற்றும் அவரது lawyer Sidney Powell ஆகியோரின் twitter கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. மேலும் Ron Watkins, என்பவரின் 8kun ன் சமூக வலைத்தளமும் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிரம்ப் மற்றும் அவரது முக்கிய ஆதரவாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டதால், சமூக வலைத்தளத்தில் உள்ள மற்றொரு Parler ஆப் மூலம் அவரது ஆதரவாளர்கள் பேச வாய்ப்பு இருப்பதால் ,google மற்றும் apple நிறுவனமும் சேர்ந்து அந்த ஆப்-ன் விரிவான திட்டங்கள் குறித்து சமர்ப்பிக்குமாறு 24 மணிநேர அவகாசம் அளித்துள்ளது.இதையடுத்து அந்த ஆப்-ன் திட்டங்கள் சமர்ப்பிக்கவில்லை என்றால் அந்த ஆப்-ன் பயன்பாடு அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.