Breaking News

மெல்போர்னில் $ 5 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருட்கள் மற்றும் பணமும் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது !

மெல்போர்னில் சுமார் $ 5 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருட்களும் பணமும் போலீஸ் சோதனையின் போது கைப்பற்றப்பட்டது. இதில் தொடர்புடைய 47 வயது நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

சுமார் இரவு 9.30 மணி அளவில் Dorcas தெருவில் சந்தேகம் ஏற்படும் வகையில் லாரி சென்றதால் ,அந்த லாரியை போலீசார் மடக்கி பிடித்தனர்.அதில் சட்டவிரோதமான வகையில் கடத்திச்சென்ற போதை பொருட்களை கைப்பற்றினர்.

Search warrant-டுடன் the Echo taskforce தேடுதல் வேட்டையின் போது $ 5 மில்லியன் மதிப்புள்ள cocaine எனப்படும் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது .போதைப்பொருட்கள் கடத்துவது சட்டப்படி குற்றம் என்று தெரிந்த பிறகும் குற்றத்தை செய்த அந்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

cocaine கடத்தல், cocaine மறைத்துவைத்தல் ,தவறான செயலில் ஈடுபட்டு வருமானத்தை மறைத்து வைத்தல் போன்ற பல பிரிவுகளின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர் .Melbourne magistrate Court இவர் ஆஜர்படுத்தப்படுவார் என்று தகவல் வெளிவந்துள்ளது.