Breaking News

மூத்த அமைச்சர்களின் நடத்தையின் மேல் கேள்விக்குறி- மனித பலவீனம் என்று ஸ்காட் மோரிசன் கருத்து !

Prime Minister Scott Morrison தனது இரண்டு மூத்த அமைச்சர்களின் நன்நடத்தை கேள்விக்கு வந்தவுடன்,”இது மனித பலவீனம் என்பதை புரிந்துகொள்வார்கள் என்று தாம் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

Canberra Bar-ல் லிபரல் கட்சி ஊழியருக்கு நடந்த சம்பவத்தை தொடர்ந்து Malcolm Turnball தன்னை விசாரித்ததாக four corners வெளிப்படுத்தியதை அடுத்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள Attorney General Christian Porter பரிசீலித்து வருகிறார்.

தான் Prime Minister-ஆக இருந்தபொழுது Mr Tudge-ம் Mr Porter-ம் மந்திரிக்கு உண்டான அறத்தை மீறி நடக்கவில்லை என்று திரு மோரிசன் தெரிவித்தார்.மேலும் இந்த Program-ஆல் எழுப்பப்பட்ட பிரச்சினைகளை தீவிரமாக எடுத்துக்கொண்டதாக தெரிவித்தார்.

Bar-ல் நடந்த சம்பவத்தை four corners வகைப்படுத்தியதை தாம் திட்டவட்டமாக நிராகரிப்பதாக தெரிவித்த Mr Porter, இந்த திட்டத்தின் மற்ற அம்சங்கள் அவதூறானவை என்று தெரிவித்தார்.

The Four Corners Program வெளிப்படுத்திய பழைய சட்டப்பள்ளி இதழ்களில் திரு போர்டர் பெண்களைப் பற்றி இழிவான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.இதற்கு பதிலளித்த போர்டர்.”24 ஆண்டுகளுக்கு முன் நான் எழுதியதை குறித்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.இப்பொழுது அவ்வாறு எழுத மாட்டேன்.அதை நினைத்து வருத்தப்படுகிறேன் என்று தனது அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

Four Corners Program முன்னாள் அரசியல் ஊழியர் Rachel Miller மற்றும் Immigration அமைச்சர் Alan Tudge ஆகியோருக்கு இடையிலான விவகாரம் பற்றிய விவரங்களையும் கண்டுபிடித்தது.

“எனது செயல்களுக்காக நான் மிகவும் வருந்துகிறேன். இதனால் என் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட காயத்தை நினைத்து வருந்துகிறேன்.Ms Miller அனுபவித்த காயத்திற்கும் வருந்துவதாக Mr Tudge தெரிவித்தார்.

Prime Minister Scott Morrison எழுப்பப்பட்ட பிரச்சினைகள் மிக முக்கியமானவை என்பதை ஒப்புக்கொண்டார்.மேலும் ,இந்த பிரச்சினையை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.