Breaking News

புதிய கொரோனா தொற்று பரவலினால் UK பயணிகள் விதிகளில் மாற்றம் வருமா?

புதிய மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ், UK-யிலிருந்து பரவியதாக நம்பப்படுவதால், பல நாடுகள் UK-க்கான விமான சேவைகளை ரத்து செய்துள்ளனர். ஆனால் B117 Lineage என குறிப்பிடப்பட்டுள்ள இந்த புதிய கொரோனா , ஏற்கனவே உலக அளவில் பரவி இருப்பதால் இந்த கட்டுப்பாடுகள் அவசியம் இல்லை என ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் புதிய வைரஸின் பரவும் தன்மை 70% அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இது உலக அளவில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

NSW-ல் 2 நபருக்கும், விக்டோரியாவில் 2 நபருக்கும் South Australia-வில் ஒருவருக்கும், புதிய வைரஸ் தொற்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஐந்து நபர்களும் விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் சமூகபரவல் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா , UK-க்கான அனைத்து விமான சேவைளையும் நிறுத்தியுள்ளது. UK-யில் இருந்து வரும் பயணிகள் United States வருவதற்கு முன்பாக தங்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. UK-ல் இருந்து திரும்பி வரும் பயணிகளுக்கு அனுமதி அளிக்கும் அரசின் முடிவை Chief Medical Officer Paul kelly ஆதரித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் கடுமையான விடுதி தனிமைப்படுத்துதல் திட்டம் இருப்பதால், புதியவைரஸ் கட்டுப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 12 மாதங்களில் இந்த Covid-19 வைரஸ் லட்சக்கணக்கான மரபணு மாற்றங்கள் அடைந்திருக்கலாம் என்றும், இது தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது என்றும் Melbourne-based Physician Dr.Stephen Parnis தெரிவித்துள்ளார் இந்த மரபணு மாற்றம் அடைந்த வைரஸ் மிக மோசமான நோயாக மாறுகிறது என்பதுதான் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. இந்த புதிய வைரஸ் மிக விரைவாக பரவுவதால் இதை கட்டுப்படுத்த நாம் முயற்சிகள் எடுக்கும் நிலையில் உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

UK-க்கான விமான சேவைகள் ரத்து என்ற பல நாடுகளின் முடிவுகள், அரசியல் ரீதியான முடிவுகளாக இருக்கலாம் என Public Health Physician Nathan Grills தெரிவித்துள்ளார். மேலும் இந்த புதிய வைரஸ் பல நாடுகளில் பரவலாக காணப்படும் என்றும் , இதை கண்டுபிடித்த முதல் நாடு UK என்பதால் அங்கிருந்து பரவியதாக நம்புகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை தொற்றுப் பரவலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே நமது நோக்கம் என்றும், நமது நாட்டின் விடுதி தனிமைப்படுத்துதல் முறையை நாம் நம்பலாம் என்று Dr.Grills தெரிவித்துள்ளார். புதிய விதமான வைரஸ் தொடர்ந்து உருவாகிக்கொண்டே இருக்கின்றன எனவும், ஒவ்வொன்றுக்கும் நாம் கவனம் செலுத்துவது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பயணம் மேற்கொள்ளும் முன் Covid-19 கட்டுப்பாட்டு விதிகளை முறையாக பின்பற்றினால், இந்த புதிய வைரஸை நாம் தடுக்கலாம் என Dr.Parnis and Dr. Grills தெரிவித்துள்ளனர். 2021 ஆம் ஆண்டு சிறப்பாக இருக்கும் என்றும் ஒரு நாடாக நாம் பல சோதனைகளை கடந்து வந்துள்ளோம் என்றும், இந்த சமூக பரவல் நமக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்து உள்ளன என்றும் Dr. Parnis தெரிவித்துள்ளார்.