Breaking News

பாதகமான காலநிலையை Australia முடிவுக்கு கொண்டு வருவதை அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள் !

பாதகமான காலநிலை போரினை ஆஸ்திரேலியா முடிவுக்கு கொண்டு வருவதை இந்த உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என former United Nations climate chiefChristiana Figueres தெரிவித்தார்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களில் உலகளவில் முன்னோடியாக விளங்க கூடிய ஆஸ்திரேலியா இந்த விஷயத்தில் கண்மூடித்தனமாக இருப்பது தனக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும் அவர் வேதனையாக கூறினார்.

பருவ காலநிலை மாற்றத்தில் Australia கொண்டுள்ள நிலையற்ற நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டுமென அவர் எச்சரித்தார் .1995ஆம் ஆண்டிலிருந்து பல பருவ காலநிலை மாற்றம் பற்றிய பேச்சுவார்த்தையில் இவர் ஈடுபட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் 2015 ஆம் ஆண்டு Paris உடன்பாடு ஏற்பட்ட போது இவர் UN பருவ காலநிலை கட்டமைப்பு மாநாட்டின் நிர்வாக செயலாளராகவும் இருந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது மிக அதிக அளவிலான சூரிய ஒளி ஆற்றல் உள்ளது. அதை பயன்படுத்தினால் மிக நல்ல ஒரு எதிர்காலம் உள்ளது. ஆனால் தேசிய தலைவர்கள் அதைப்பற்றி கண்மூடித்தனமாக இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

2050ஆம் ஆண்டுக்குள் net zero emissions என்ற இலக்கினை இந்த அரசாங்கம் ஏற்றுக் கொண்டு செயல்பட வேண்டும் என்று பல ஆஸ்திரேலியர்கள் தங்கள் கருத்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.

2030ஆம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வினை 26 முதல் 28 சதவீதமாக குறைப்பதே Morisson அரசின் தற்போதைய இலக்காக இருக்கிறது.
Paris பருவகாலநிலை ஒப்பந்தத்தின்படி அதன் இலக்குகளை அடைய மிகவும் அர்ப்பணிப்பு உணர்வோடு இந்த அரசு செயல்படும் என்பதை அவர் தெரிவித்தார்.

சீனா கொரியா ஜப்பான் மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகள் 2030 முதல் 2060-ம் ஆண்டுக்குள் net zero emissions கொண்டுவர இலக்கு நிர்ணயித்து உள்ளன என்று கூறினார்.

தற்போதைய காலத்தை சீரமைப்பிற்கான சரியான நேரமாக எடுத்துக் கொண்டு செயல்படுவதே தாரக மந்திரமாக இருக்கும் என்றும் அனைத்து அரசுகளும் தங்களுடைய உயர்ந்த இலக்குகளை அடுத்த ஆண்டு Glasgow-ல் நடைபெறும் COP26 பருவநிலை மாநாட்டில் கொண்டு வருவார்கள் என்று அவர் எதிர்பார்க்கிறார்.

Australian Emissions Reduction Summit மாநாடு டிசம்பர் 2 மற்றும் 4ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.