Breaking News

நோபல் பரிசு!

தமிழர்களில் முதன்முதலாக
திருச்சியை சேர்ந்த புகழ்பெற்ற அறிவியல் அறிஞர்,
சர். C.V.ராமனுக்கு
இயற்பியல் பிரிவில்
scattering of light என்ற கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு
வழங்கப்பட்ட தினம் இன்று.
( 10 டிசம்பர் 1930 )

இந்தியர்களில் இரண்டாவதும், தமிழர்களில் முதலாவதுமாக இவர் நோபல் பரிசு பெற்றார். இவருக்கு முன் 1913 ல் இலக்கியத்திற்கான பிரிவில் கவிஞர் Rabindranath Tagore க்கு வழங்கப்பட்டது.

ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலை நீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு ராமன் விளைவு (Raman Effect) என்று பெயரிடப்பட்டது.