Breaking News

நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தால் 350 ஆண்டு காலபழமையான புனித மரம் வெட்டப்பட்டது . சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு !

350 ஆண்டு பழைமையான புனித மரம் என்று அழைக்கப்படும் Old Djab Wurrung Directions மரம் விக்டோரிய அரசாங்க ஊழியர்களால் வெட்டப்பட்டுள்ளது. இதை எதிர்த்து போராடிய குழுக்களின் முகாமில் திங்களன்று போலீஸ் புகுந்ததாக உள்ளூர் பழங்குடியினர் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Melbourne-னை Adelaide-டுடன் இணைக்கும் பிரதான சாலையான விக்டோரியன் மேற்கு நெடுஞ்சாலையில் உள்ள Djab Wurrung country கடந்த ஒரு வருடமாக எதிர்ப்பு முகாமாக திகழ்ந்து வருகிறது.

மேற்கு நெடுஞ்சாலை மேம்படுத்தும் திட்டத்தால் 800 ஆண்டுகள் பழமையான புனித மரம் அழிக்கப்படுவதைக்கண்டு ஆர்வலர்கள் மற்றும் சுதேசக் குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

திங்களன்று அந்த இடத்தில் 15 போலீஸ் வாகனங்கள் வந்து முகாம் கட்டமைப்புகளை அகற்றி , எதிர்ப்பாளர்களை Directions Tree-யில் இருந்து விலக்கினர். பின்பு அந்த மரம் அழிக்கப்பட்டது.

Buangor மற்றும் Ararat இடையில் நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் முகாம்களையும் எதிர்ப்பாளர்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தும் வேலையை தீவிரமாக காவல்துறையினர் செய்து வருகின்றனர்.

மக்கள் அமைதியாக போராடுவதை விக்டோரிய காவல் துறை மதிக்கிறது. மேலும் எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனை வராமல் தவிர்கவே போலீஸ் அங்கு வரவழைக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.

இதற்கு முன் அந்த சாலையில் 100க்கும் அதிகமான விபத்துகளும் ,11 உயிர் பலிகளும் சமீப ஆண்டுகளாக ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினார்.

மரங்களை காப்பாற்றுவதற்காக இந்த நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்தை கைவிட வேண்டும் என்று ஆர்வலர்கள் விக்டோரியன் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.