Breaking News

சீனாவின் நிலக்கரி தடை அறிக்கை -ஆஸ்திரேலியாவிற்கு வர்த்தக ரீதியாக பிரச்சனை !

Canberra மற்றும் Beijing-ற்கு இடையிலான மீண்டும் ஒரு வர்த்தக பிரச்சனையை சீனா ஏற்படுத்தியதால், ஆஸ்திரேலிய நிலக்கரி ஏற்றுமதி காலவரையின்றி தடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்து உள்ளது.அதனால் இது குறித்து தகவல்களை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார் Prime Minister Scott Morrison.

ஆஸ்திரேலியாவைத் தவிர” பல நாடுகளில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்ய மின் உற்பத்தி நிலையங்களுக்கு சீனா ஒப்புதல் அளித்துள்ளதாக சில பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது .ஆனால் ஊடக அறிக்கைகள் Beijing மாநில அரசாங்கத்தால் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்று பிரதமர் கூறியுள்ளார்.

சீன அரசாங்கம் நிலக்கரித் தடையை முறையாக உறுதிசெய்தால், மற்ற நாடுகளிலிருந்து சுத்தமற்ற நிலக்கரியை பயன்படுத்த நேரிடும் என்றும் ,இது மிகப்பெரிய நஷ்டம் என்றும் Mr Morrison கூறினார் .சீனாவின் நிலக்கரி இறக்குமதியைத் தடுக்கும் இந்த நடவடிக்கை பொருளாதாரத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்குமென்றும்,இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பிரச்சனையை மேலும் அதிகரிக்கும் என்றும் விவரித்தார்.

நிலக்கரி ஏற்றுமதியைத் தடுப்பது ,வர்த்தக ரீதியான ஒப்பந்தங்களை மீறுவது ,போன்ற நடவடிக்கைகள் பாரபட்சமானது என்று வர்த்தக அமைச்சர் Simon Birmingham சுட்டிக்காட்டியுள்ளார்.

சிட்னியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,சீன அரசுக்கு சொந்தமான ஊடகங்களில் நான் படித்த அனைத்தையும் நான் நம்பவில்லை, ஆனால் ஆஸ்திரேலிய நிலக்கரி தொடர்பாக ஒரு பிரச்சனை ஏற்படுவதை நாங்கள் உணர்த்து இருக்கிறோம் என்று கூறினார்.அக்டோபர் மாதத்திலிருந்து நிலக்கரி இறக்குமதி சீனாவிலிருந்து அதிகாரப்பூர்வமற்ற தடையை சந்தித்து வருகிறோம் என்றும் அவர் கூறினார்.

இந்த நிலக்கரி தடை அறிக்கைகள் ,ஆஸ்திரேலிய பொருட்களின் மீதான சீனாவின் சமீபத்திய தடைகள் தான் ,இதுவரை மாட்டு இறைச்சி,ஒயின், பார்லி , கடல் உணவுகள் மற்றும் மரங்கள் போன்றவையும் பிரச்சனைகளில் சிக்கியுள்ளது.நிலக்கரி முடக்கம் ஆஸ்திரேலியாவுக்கு பொருளாதார ரீதியாக பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவை தவிர மங்கோலியா, இந்தோனேசியா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுக்கு சீனா நிலக்கரி விநியோகம் செய்யப்போவதாக சில ஊடகம் மூலம் தெரியவந்துள்ளது.கடந்த மாதம், ஆகஸ்ட் மாதத்தில் ஆஸ்திரேலிய ஒயின் மீது anti-dumping விசாரணையை துவக்கியது .107 முதல் 200 சதவீதம் வரையிலான அனைத்து ஆஸ்திரேலிய ஒயின் மீதும் சீனா சுங்கவரி விதித்தது.

இந்த வர்த்தக பிரச்சினையினால் சீனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆஸ்திரேலிய அரசு முடிவு எடுத்துள்ளதாகவும் Mr Birmingham கூறினார்.