Breaking News

சிட்னி வருகை தொடர்பாக Adelaide விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு தெற்கு ஆஸ்திரேலியா மன்னிப்பு கேட்டது !

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருவதால் சிட்னியில் இருந்து வருபவர்களுக்கான விதிகளை தெளிவுபடுத்தும் வேளைகளில் தெற்கு ஆஸ்திரேலிய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, ஞாயிற்றுக்கிழமை வந்த பலர், 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் அல்லது NSW திரும்ப வேண்டும் என்று கூறப்பட்டது.ஆனால் நள்ளிரவுக்கு முன் வந்தவர்கள் தனிமை படுத்தத்தேவையில்லை என்ற புதிய விதியை போலீசார் இப்போது தெளிவுபடுத்தியுள்ளனர்.

தற்போது நிலவும் குழப்பத்திற்காக Police Commissioner Grant Stevens மன்னிப்பும் கேட்டார் .சமீபத்தில் வெளிவந்த தவறான தகவல்கள் காரணமாக தாம் மன்னிப்பு கேட்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .தகவல்தொடர்பு முறிவு எங்கிருந்து வந்தது என்பதை நாங்கள் கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம் ,இந்த தவறான தகவல்கள் மக்களை பாதித்துள்ளது, அதனால் நாங்கள் மிகவும் வருந்துகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார் .

சிட்னியில் சமீபத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு தற்போது 70 ஆக அதிகரித்துள்ளது. பலரும் தங்களை பரிசோதனை செய்து கொள்ள நீண்ட வரிசையில் நின்று காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகள் விதிகளின்படி வடக்கு கடற்கரை பகுதியில் இருக்கும் எவரும் மாநிலத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். இன்று முதல் அந்த பகுதியில் இருந்து வரும் அனைவரும் SA-விற்கு வந்தால் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும்,தனிமைப்படுத்தப்பட்ட முதல் நாளிலும், ஐந்தாம் நாளிலும், மற்றும் பன்னிரெண்டாம் நாளிலும் சோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.பண்டிகை நாட்களில் திடீரென்று மாற்றப்பட்ட விதிகளின் காரணமாக மக்கள் பாதிப்படைந்தது வேதனை அளிப்பதாகவும், ஆனால் வேற எந்த ஒரு வழி இல்லாமல் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் தென் ஆஸ்திரேலியாவில் எந்தவொரு கொரோனா பாதிப்பும் இருக்க கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுத்து இருக்கிறோம் என்று Premier Steven Marshall கூறியுள்ளார்.