Breaking News

கொரோனா பாதிப்புகள் அதிகமாக இருப்பதனால் ஆஸ்திரேலியாவைச் சுற்றி எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன !

NSW-வில் 3 புது தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.5 தொற்றுகள் Sydney’s northern beaches-உடன் தொடர்புடையவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பினால் ,பல புது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Western Australia :

வெளி மாநிலங்களில் இருந்து வீடு திரும்பும் மேற்கு ஆஸ்திரேலியர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.டிசம்பர் 21 அல்லது அதற்குப் பிறகு WA க்கு வந்த அனைத்து விக்டோரியர்களும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு பிறகு வெளியேறிய 16,000 பேருக்கும் இது பொருந்தும். WA-வில் இருப்பவர்களுக்கு யாருக்கேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்துகொள்ளும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள் .தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து மொத்த வழக்குகளின் எண்ணிக்கையை 861-ஆக உள்ளது .

South Australia :

NSW-விற்கு தனது எல்லையை மூடியது SA .விக்டோரியாவின் நிலைமையை கண்காணித்து வருகிறது.மாற்றப்பட்ட விதிகளின் காரணமாக விமானங்களில் பயணம் செய்பவர்கள் ,அல்லது WA க்கு விமானங்களில் செல்பவர்கள் குறித்து அரசு ஏற்கனவே பரிசீலனை செய்திருக்கவேண்டும் என்று Police Commissioner Chris Burgess கூறினார்.அவர்கள் அனைவரும் காவல் துறையினரின் உதவியோடு தனிமைப்படுத்தலுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

Northern Territory:

சிட்னியை COVID-19 ஹாட்ஸ்பாட் என்று Northern Territory அறிவித்துள்ளது .வியாழன்கிழமை நள்ளிரவுக்கு பிறகு சிட்னியிலிருந்து Northern Territory-க்கு வரும் அனைவரும் தனிமைப்படுத்தப்படவேண்டும்.வரவிருக்கும் வாரங்களுக்கு அனைத்து பயணத் திட்டங்களையும் மறுபரிசீலனை செய்யுமாறு NT மக்களுக்கு Ms Fyles கூறியுள்ளார் .

Victoria :

ஜனவரி 1 முதல் NSW-உடனான அனைத்து எல்லைகளையும் மூடியது விக்டோரியா .அதன் பிறகு விக்டோரியாவிற்கு வரும் அனைவரும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் .இவ்வாறு எல்லைகள் மூடப்படுவதால் பல்லாயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று Acting Victorian Premier Jacinta Allan கூறினார்.விடுமுறை திட்டங்கள் மற்றும் பயணத்திட்டங்கள் அனைத்தும் இந்த மாற்றத்தால் பாதிக்கப்படும் என்று அவர் கருத்து தெரிவித்து உள்ளார்.வீட்டில் கொண்டாடும் பண்டிகைகள் அனைத்தும் முகக்கவசத்துடன், சமூக இடைவெளியோடு கொண்டாட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் .

ACT :

ACT மற்றும் Canberra “green zone”ஆக அறிவிக்கப்பட்டுள்ளது .அங்கு இருக்கும் குடியிருப்பாளர்கள் விக்டோரியாவுக்குச் செல்ல முன்பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.இது குறித்து SA Premier Steven Marshall கூறுகையில் ,பயணக்கட்டுப்பாடுகள் கடுமையாக இருந்தாலும் ,சுகாதாரத்துறையின் ஆலோசனையின் படி இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார் .கொரோனா பரவல் பேரழிவை தரக்கூடும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார் .

NSW இன் நிலைமை நிலையற்றதாக உள்ளது :

தற்போது அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக இயல்பு நிலைக்கு திரும்புவது மிகவும் கடினம் என்று NSW Chief Health Officer Kerry Chant எச்சரிக்கை விடுத்துள்ளார் .அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் இந்த நிலை மாற வழி இருக்கிறது என்று அவர் கூறினார்.Wollongong, the Central Coast, Nepean மற்றும் the Blue Mountains-இல் 10 பேர் கூடும் இடத்தில் 5 பேராகவும் ,வெளியிடங்களில் ஒன்று கூடுவோர்களின் எண்ணிக்கை 50-இல் இருந்து 30-ஆக குறைக்கப்பட்டுள்ளது .