Breaking News

கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டாலும் ,ஆஸ்திரேலியர்களுக்கு இந்த வருடம் வெளிநாட்டுப் பயணங்களுக்கு அனுமதி இல்லை!

பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் தடுப்பூசியை உபயோகப்படுத்தினாலும், இந்த ஆண்டு வெளிநாட்டு பயணங்களின் திட்டங்களை மத்திய சுகாதார செயலாளர் brenton Murphy நிராகரித்தார்.

கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் வெளியிட்டாலும், இந்த ஆண்டு ஆஸ்திரேலிய நாட்டின் எல்லைகளை திறக்க அனுமதி இல்லை என மத்திய சுகாதார செயலாளர் கூறினார். மேலும் Brendon Murphy திங்களன்று நாட்டிற்கு இலவசமாக பயணம் செல்லும் முறை 2021 ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கவில்லை என்றார்.

இந்த ஆண்டு முக்கியமான பகுதிகளை கணிசமான எல்லை கட்டுப்பாடுகளுடன் செல்வோம் என்று நான் நினைக்கிறேன் என அவர் கூறினார்.
தடுப்பூசி போடப்பட்ட அதிக மக்கள்தொகை நம் நாட்டில் இருந்தாலும், அது வைரஸ் பரவுவதை தடுக்கும் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. மேலும் தேவைப்பட்டால் சில நேரங்களில் தனிமைப் படுத்துதல் தொடங்கும் என கூறினார்.

மார்ச் 2020 முதல் Covid-19 பரவுவதை தடுக்க ஆஸ்திரேலியாவின் எல்லைகள் பெரும்பாலும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு அனுமதி இல்லாமல் மூடப்பட்டிருந்தது, குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் ஒவ்வொரு வாரங்களிலும் திரும்ப அனுமதிக்கப்படுகிறார்கள்.

Norway அரசு Pfizer தடுப்பூசியை பெற்ற பின்னர் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் இறந்ததாக அறிவித்ததை அடுத்து, இங்கு தொடர்ந்து அவ்விவரங்களை தொடர்ந்து சேகரிக்கின்றனர். மேலும் Pfizer மற்றும் இங்கு தயாரிக்கப்படும் Astrazeneca jab ஆகிவற்றை பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

பொருளாளர் Josh frydenberd பாதுகாப்பிற்கு முதலிடம் கொடுப்பது எவ்வளவு முக்கியம் என்று நார்வேயின் அறிக்கைகள் அடிக்கோடிட்டு காட்டுகிறது. அதனால் தான் நாங்கள் இதை அவசரப்படுத்தவில்லை என்று அவர் மெல்போர்னில் செய்தியாளர்களிடம் கூறினார். ஆனால் Pfizer மற்றும் Astrazeneca jab மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்றும் கூறினார்.

மேலும் ஆராய்ச்சியாளர் Roy Morgan 1,200க்கும் மேற்பட்டவர்களை நடத்திய ஆய்வில் 75 சதவீத ஆஸ்திரேலிய மக்கள் தடுப்பூசி போட ஆர்வமாக உள்ளனர் என்று கூறினார்.