Breaking News

கொரோனா குறித்து தவறான தகவலை பரப்பும் எம்.பி… ‘உண்மைகள் சில நேரங்களில் சர்ச்சைக்குரியதாக இருக்கலாம்’ என மைக்கேல் மெக்கார்மேக் தெரிவித்துள்ளார்!

Official portrait of Assistant Minister for Defence Michael McCormack MP

கொரோனா வைரஸ் சிகிச்சைகள் குறித்து நிரூபிக்கப்படாத தவறான தகவல் பரப்பியதற்காக Liberal MP Craig Kelly-யை கண்டிக்க மறுத்ததற்காக Acting Prime Minister Michael McCormack விமர்சிக்கப்பட்டார்.

மேலும் கொரோனா குறித்து வந்த தவறான தகவலைக் கண்டிக்க Acting Prime Minister Michael McCormack கேட்காமல் மறுத்தது மிகவும் ஆபத்தான ஒரு செயலக இருக்கிறது என அரசியல் எதிரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு நிரூபிக்கப்படாத சிகிச்சைகள் குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக லிபரல் எம்.பி. Craig Kelly மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள, நிலையில் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், தற்போதுள்ள சூழலில் குழந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கோருவது “குழந்தை துஷ்பிரயோகத்திற்கு” சமமாகும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த பதிவிற்கு மட்டும் Acting Prime Minister Michael McCormack மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் Labor’s health spokesperson Chris Bowen கூறுகையில், McCormack, கெல்லியைப் பாதுகாப்பதை தவறு என கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் கெல்லி “ஆபத்தான” தவறான தகவலை பரப்புவது மிக தவறு அது கவலை அளிப்பதாகவும் போவன் கூறியுள்ளார் .

இது பற்றி ஸ்காட் மோரிசன் கூறும் போது, ஒரு mp க்கு ஆதரவாக Prime minister பேசுவது சரி இல்லை என்றும், மேலும் இது மக்கள் மத்தியில் அரசு மீது நம்பிக்கை இல்லாத ஒரு சூழலை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார் .

“கொரோனா சிகிச்சை குறித்து வரும் தவறான விஷயங்களால் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை இல்லாத தன்மை ஏற்படும். எனவே சமூக ஊடகத்தின் மூலம் மக்களை சரியான பாதையில் சிகிச்சை மற்றும் அதன் விழிப்புணர்வு குறித்து முகாம் ஒன்றை அரசு நடத்த வேண்டும். என Dr Omar Khorshid கூறினார்.