Breaking News

கிறிஸ்துமஸ் தின உரையில் மக்களுக்கான Queen Elizabeth-ன் நம்பிக்கை வரிகள் !

கிறிஸ்துமஸ் தின உரையில் மக்களுக்கான Queen Elizabeth-ன் நம்பிக்கை வரிகள் !

Covid-19 தொற்றினால் தங்கள் சொந்தங்களை இழந்தவர்களுக்கும் , பிரிவினால் வருந்துபவர்களுக்கும், இந்த கிறிஸ்துமஸ் தின உரையில் தனது அன்பையும், அரவணைப்பையும் தான் வழங்குவதாக Queen Elizabeth தெரிவித்துள்ளார். 94 வயதான Queen Elizabeth எதிர்காலத்திற்கான நம்பிக்கையை பற்றி திரும்பத் திரும்ப தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

Covid-19 தாக்குதலினால், வழக்கமாக குடும்ப கொண்டாட்டம் இருக்கக்கூடிய இந்த தினம், அந்த நிலையை இழந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார் . பலருக்கு இந்த நாள் மிக சோகமானதாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சிலர் தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்து தவிப்பார்கள் என்றும், சிலர் தங்கள் குடும்ப நண்பர்களையும் குடும்ப உறுப்பினர்களையும் பிரிந்து இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார். அவர்களுக்கு என்னுடைய அரவணைப்பையும், அன்பையும் பரிமாறிக் கொள்கிறேன் என்று தனது உரையில் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் யாரும் தனித்து விடப்படவில்லை என்றும், என்னுடைய சிந்தனையும் பிரார்த்தனைகளும் அவர்களுடன் இருக்கும் என்று நான் உறுதி கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Queen Elizabeth வழக்கமாக நடைபெறக்கூடிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை தவிர்த்து, தனது கணவர் Prince Philip-உடன் Windsor Castle -ல் தன்னுடைய காலத்தை கழித்து வருகிறார். வழக்கமாக கிழக்கு இங்கிலாந்தில் உள்ள Sandringham Estate-ல் உள்ள அவரது வீட்டின் முன்பு Windsor மக்கள் கூடுவது , பின்னர் அருகில் உள்ள தேவாலயத்திற்கு சென்று வழிபடுவது தொன்றுதொட்டு நடக்கக் கூடிய ஒரு நிகழ்வு ஆகும்.

தற்போது மரபணு மாற்றம் அடைந்த புதிய Covid-19 தொற்றினால் மருத்துவமனையில் தொற்று எண்ணிக்கை அதிகரித்தும், இறப்புகள் அதிகரித்தும் காணப்படுகின்றன. பல இடங்களில் கட்டுப்பாடுகள் மிக கடுமையாக பட்டுள்ளதாலும், லண்டன் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதியில் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டதாலும், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் கழை இழந்துள்ளன . இந்த உரையில் முன் களப்பணியாளர்கள் பலருக்கும் தன்னுடைய பாராட்டையும் அன்பையும் அவர் தெரிவித்துள்ளார். மக்களின் போராட்ட குணத்தினால் தான் மனம் நெகிழ்ந்துள்ளதாகவும், பெருமை படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.