Breaking News

ஆஸ்திரேலிய காட்டுத்தீ உலக அளவில் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட மிக மோசமான இயற்கைபேரழிவு

புதிதாக வெளிவந்த அறிக்கையில், காலநிலை மாற்றத்தின் நீண்டகால தாக்கத்தினால் மிக அதிக இழப்புகளை உண்டாக்கிய இயற்கை பேரழிவாக ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்த காட்டுத்தீ உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உலக அளவில் நிகழ்ந்த மிக மோசமான 10 இயற்கை பேரழிவுகளின் மூலம் $150 Billion அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேரழிவினால் 3500 பேர் இறந்துள்ளார்கள் என்றும், 13.5 Million-க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள் என்றும் தெரிகிறது. ஜனவரி மாதத்தில் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட கட்டுக்கடங்காத காட்டுத்தீ முதல் Antartic பிரதேசத்தில் உண்டான சூறாவளி வரை, இயற்கை பேரிடரினால் இந்த வருடத்தில் மிக அதிக அளவில் சேதம் உண்டாகியுள்ளன.இதில் பல இழப்புகள் காப்பீடு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேரழிவுகளினால் பணக்கார நாடுகளை விட ஏழை நாடுகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழை நாடுகளில் 4% பொருளாதார இழப்புகள் மட்டுமே காப்பீடு செய்யப்பட்டுள்ளன. அதே வேளையில் பணக்கார நாடுகளில் இது 60 சதவீதமாக உள்ளது என ஆய்வில் தெரியவருகிறது. ஆசியாவில் வெள்ளம், ஆப்பிரிக்காவில் வெட்டுக்கிளிகள், Europe மற்றும் அமெரிக்காவில் புயல்கள், 2020ஆண்டில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்ப்படுத்தி வந்துள்ளது என Christian Aid’s Climate Policy தலைவர் Kat Kramer தெரிவித்துள்ளார்.

பல நூற்றாண்டுகளாக பெறப்படும் காலநிலை தரவுகளின் மூலம், பூமியில் அதிகரிக்கும் வெப்பத்தினால்தான் இந்த தாக்கங்கள் அதிகரித்து உள்ளதாக கண்டறியபட்டுள்ளது. வெப்பமண்டலப் பகுதிகளில் உண்டாகும் சூறாவளி, கடும் புயல் மற்றும் சுழல்காற்றுகள் மிக வலுவாக இருப்பதாகவும், மிக நீண்ட தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் மற்றும் அதிக அளவில் மழைப்பொழிவை ஏற்படுத்துவதாகவும் தெரிகிறது. 2020 ஆம் ஆண்டு உண்டான 30 Atlantic சூறாவளியினால் 400 இறப்புகளும் , $41 Billion சேதங்களும் உண்டானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலநிலை மாற்றம் எந்த அளவுக்கு தாக்கத்தை உண்டு பண்ணும் என்பதற்கு உதாரணம் சீனாவிலும் இந்தியாவிலும் உண்டான அதிதீவிர வெள்ளங்களாகும் . 2020 இல் அதிக இழப்புகளை உண்டாக்கிய ஐந்து நிகழ்வுகள், ஆசியாவின் வழக்கத்திற்கு மாறான புவிவெப்பமயமாதலோடு சம்பந்தப்பட்டு இருக்கிறது. 2020 – ல் Bangaledesh -ல் உண்டான வெள்ளம், கிட்டத்தட்ட அந்த நாட்டின் கால் பகுதியை மூழ்கச் செய்தது. ஆஸ்திரேலியாவின் California-ல் மற்றும் Arctic வட்டத்தில் உள்ள Russia-வின் Siberian Hinterland பகுதிகளில் உண்டான காட்டுத்தீ, புவி வெப்பம் அதிகரிப்பதால் உண்டாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 19ஆம் நூற்றாண்டுடண் ஒப்பிடும்போது, தற்போது புவியின் வெப்பம் 1.1 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. புவி வெப்பமாதலை 2° C-க்கு கீழேயோ, முடிந்தால் 1.5°C-க்கு கட்டுப்படுத்துமாறு உலகநாடுகளுக்கு 2015 Paris ஒப்பந்தம் கட்டளையிட்டது. 2018 ஆம் ஆண்டு UN’s IPCC வெளியிட்ட அறிக்கையில், 1.5°C என்பது ஒரு பாதுகாப்பான நிலை என்று தெரிவித்துள்ளது. அதிகரித்துவரும் மற்றும் தீவிரமாகும் இயற்கை காலநிலை பேரழிவுகள், புவி வெப்பமடைவதால் உண்டாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 மற்றும் 2020ஆம் ஆண்டு உண்டான ஆஸ்திரேலியா காட்டுத்தீ 20% காடுகளை அழித்தது மட்டுமல்லாமல், பல லட்சக்கணக்கான காட்டு விலங்குகளையும் கொன்றுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த நூற்றாண்டோடு ஒப்பிடும்போது, Europe-ல் அதிக பாதிப்பை தரக்கூடிய வெப்பஅலைகள் 100 மடங்கு அதிகரித்துள்ளதாக தற்போதைய ஆய்வு மூலம் தெரிய வருகிறது. நூற்றாண்டுக்கு ஒரு முறை நிகழும் நிகழ்வுகளான வெப்ப அலைகள் மற்றும் வெள்ளம், தற்போது வழக்கமான ஒன்றாக நிகழ்கின்றன என WMO secretary-general Petteri Taalas தெரிவித்துள்ளார்.