Breaking News

ஆஸ்திரேலியா சினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் தமிழர்- அலன் ஆறுமுகம் !

ஆஸ்திரேலியா சினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் தமிழர்- அலன் ஆறுமுகம் !

இவர் தற்போது ஆஸ்திரேலியாவில் முன்னனி இயக்குனராக வளம் வந்து கொண்டு இருக்கிறார். இவரது முழுப் பெயர் இளந்திரையன் அலன் ஆறுமுகம். Aiyai, ஆர்க் 13, நைன் நைட்ஸ் மற்றும் அப்சு என ஏகப்பட்ட படங்களை தன் கை வசம் கொண்டு பிஸியாகவே இருக்கிறார்.

அவரது சைக்காலஜிக்கல் த்ரில்லர் படமான Aiyai படம் தற்போது அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது .
imdb 8.9 மதிப்பீடு கொடுத்துள்ளது.இந்த படம் 14 க்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்கள் மற்றும் எண்ணிக்கையிலிருந்து அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

தற்போது இவரது படமான ARK13 படத்தின் post production வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றது.இப்படம் அதிரடி திரில்லர் அம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ளது .பிரபல நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை உள்ளடக்கிய ஒரு ஹாலிவுட் ஸ்டுடியோ புரொடக்ஷன்ஸ்,ஸ்டண்ட் மூலம் அனைவரையும் கவர்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

இவர் திரில்லர் மற்றும் போர் சார்ந்த படங்களை இயக்குவதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவரது படத்திற்காக காத்துகொண்டு இருக்கின்றனர் .இவரது அடுத்த படமும் The Nine Knights படமும் 14ஆம் நூற்றாண்டின் போர் சார்ந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது .மேலும் இப்படம் உலக அளவில் அங்கீகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது .

இவரது படத்தை குறித்து அலன் கூறுகையில் ,”எனது திரைப்படங்கள் மனதளவில் தாக்கத்தை உருவாக்கினாலும், காட்சி கதை சொல்லலின் தனித்துவமான பாணிகளை நான் சேர்த்து கொள்கிறேன், சினிமா யதார்த்தத்தை ,commercial மற்றும் அசல் கதைகளைக் கொடுக்க நான் முயற்சி செய்கிறேன் ,எனது அசாதாரண நிஜ வாழ்க்கை அனுபவங்கள், வரலாற்று நிகழ்வுகள் இயற்கையின் அழகு, வலிமை ஆகியவற்றிலிருந்து நான் இயங்குவதற்கான தூண்டுகோலை பெறுகிறேன் என்று கூறியுள்ளார்.

பல வரவேற்புகளை பெற்றுள்ள AIYAI திரைப்படம் ,இன்னொரு மைல்களையும் தொட்டுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.பல விருதுகளையும் இப்படம் தட்டிச்சென்றுள்ளது .Hollywood Boulevard Film Festival USA-வில் இப்படம் தேர்வாகியுள்ளது .

TNLIFF 2020, Sydney-இல் இறுதிசுற்றுக்கு இப்படம் தேர்வாகியுள்ளது ,சிறந்த நடிகருக்கான விருது- Kabir Singh-க்கும்
சிறந்த ஒளிப்பதிவாளர் விருது – Damien Beebe-க்கும் கிடைத்துள்ளது .The Buddha International Film Festival ,Crown Wood International Film Festival போன்ற பல விருதையும் பெற்றுள்ளது .

AlTFF Winter 2020-க்கான சிறந்த thriller படதிற்கும் ,சிறந்த ஒளிப்பதிவாளர் விருதுக்கும் அரை இறுதி சுற்றுக்கும் தேர்வாகியுள்ளது .NOX FILM FESTIVAL ( NFF Salto Uruguay ) ,அமெரிக்கன் screen விருது ,AMAA awards,FOCUS INTERNATIONAL FILM FESTIVAL ( FIFF ) ,International Moving Film Festival( IMFF),Independent Star Film fest ( Germany ) போன்ற பல விருதுகளுக்கு இப்படம் தேர்வாகியுள்ளது.

இவரது தனித்துவமான படைப்பாற்றலை கண்டு பலரும் இவரையும்,இவரது படங்களையும் பாராட்டியும் ,புகழ்ந்தும் வருகின்றனர்.