Breaking News

ஆஸ்திரேலியாவில் BLACK SUMMER காட்டுத் தீயினால் 3 பில்லியன் காட்டு விலங்குகள் பாதிப்பு !

கோடை காலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோலா கரடிகள் பாதிக்கப்பட்டுள்ளன . மொத்தம் 3 பில்லியன் காட்டு விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டு உள்ளன.

சுமார் 143 மில்லியன் பாலூட்டி விலங்குகள் காட்டுத்தீ எரிந்த பகுதிகளில் இருந்ததாக World Wildlife Fund (WWF) அறிக்கையின் வாயிலாக தெரிய வருகிறது. மேலும் 2.46 பில்லியன் ஊர்வனவைகளும், 181 பில்லியன் பறவைகளும் மற்றும் 51 பில்லியன் தவளைகளும் காயமடைந்து இருக்க வாய்ப்புள்ளதாகவும், கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் இல்லையென்றால் அவைகள் தன்னுடைய வாழ்விடத்தை இழந்திருக்கலாம் என்றும் கடந்த திங்கட்கிழமை வெளியான அறிக்கை தெரிவிக்கின்றது.

காட்டு உயிரினங்கள் மட்டும் இயற்கையின் மீது உண்டான இந்த பாதிப்பை பற்றி எண்ணுவதற்கே மனதிற்கு மிகக் கஷ்டமாக இருப்பதாகவும், இதற்கு முன்னால் இப்படி ஒரு பாதிப்பு இருந்ததில்லை என்றும் இதற்கு கண்டிப்பாக ஒரு நல்ல ஒரு முடிவை எடுத்து ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதாகவும் chief executive of WWF Australia Dermot O’Gorman வேதனை தெரிவித்துள்ளார்.

தெற்கு ஆஸ்திரேலியாவில் 41ஆயிரத்துக்கும் அதிகமான கோலா கரடி வகைகள் , விக்டோரியாவில் 11,000 மற்றும் NSWவில் 8,000 கோலா கரடிகள் இந்த பேரழிவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை ஏற்கனவே அழிவின் விளிம்பை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற உயிரினங்கள் மீது உள்ள பாதிப்பை தெரிவிப்பதால் நம் கண் முன்னால் இந்த உயிரினங்கள் அழிவதை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜீன் மாதம் NSW parliamentary மேற்கொண்ட விசாரணையில், அரசு தலையீடு இல்லையென்றால் 2050 ஆம் ஆண்டுக்குள் கோலா இனம் அழிந்துவிடும் என்று தெரிய வந்துள்ளது. அழிவை நோக்கி செல்லும் இந்த பாலுட்டிகளை பாதுகாக்க திட்டங்களை தீட்ட அரசு முன்வர வேண்டும் என்று விலங்கின பாதுகாப்பு குழு கோரிக்கை வைத்துள்ளது.

இக்காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட 11.46 million Hectares காட்டுப்குதியில் வாழும் உயிரினங்களைப் பற்றி குறைவான தகவல்களே உள்ளதால், இறந்த விலங்குகளை பற்றிய எண்ணிக்கை கொடுப்பது கடினமாக உள்ளது. நேரடியாக தீவிபத்தில் பாதிக்கப்படாத விலங்குகள், காயம் ஏற்பட்டதாலும் அதனுடைய வாழ்வாதரம் பாதிக்கப்பட்டதாலும் அதிக அளவில் இறப்புகளை சந்திக்கின்றன என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டு விலங்குகளை பாதுகாப்பதற்கும் ,அதனுடைய வாழ்வாதாரத்தை மீட்பதற்கும் இந்த அறிக்கை 11 பரிந்துரைகளை வழங்கி உள்ளது.
அந்தப் பகுதியில் வாழும் விலங்குகளின் எண்ணிக்கை மற்றும் காட்டுத்தீயின் தாக்கத்தை எதிர்கொள்ளும் அதனுடைய திறன் பற்றி பல ஆய்வுகள் மேற்கொண்டால் மட்டுமே இந்த விலங்குகளை பாதுகாக்க முடியும் என்று Lily Van Eeden தெரிவித்தார். விலங்குகளின் எண்ணிக்கையில் உள்ள குறைபாட்டை நீக்குவதற்கு, கடந்த நவம்பர் மாதம் $2 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக Environment Minister Sussan Ley அறிவித்தார்.

விலங்கினங்களின் எண்ணிக்கையை கண்காணிப்பது, அதனுடைய வாழ்வாதாரத்தை பாதுகாப்பது மற்றும் காட்டுத்தீயை தடுப்பது ஆகியவையும் இந்த பரிந்துரையில் அடங்கியுள்ளன.

இந்த ஆய்வினால் நாட்டு மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாகவும் ,இந்த மாதிரியான சோகமான நிகழ்வு , எதிர்காலத்தில் நடைபெற கூடாது என்றும் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்ததாக Sydney’s Professor Chris Dickman தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் தொடர்ச்சியான கண்காணிப்பு மூலம், எங்கே எப்பொழுது செயல்பட வேண்டும் என்றும் ,இந்த காட்டு உயிரினங்களை பாதுகாப்பதற்கு தேவையான உதவிகள் என்னென்ன என்பதையும் நாம் அறிந்திருந்தால், இது சாத்தியமாகலாம் என்றும் அவர் கூறினார்.