Breaking News

ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலியா வீரர்களால் போர்க்குற்றம் நடந்ததை விசாரிக்க சிறப்பு புலனாய்வு அதிகாரி !

கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்து வரும் விசாரணையை தொடர்ந்து 2005 மற்றும்2016 ஆம் ஆண்டு நடந்த சட்ட மீறல்கள் மற்றும் ஆஸ்திரேலியா சிறப்பு படையினரால் போர் குற்றங்கள் நடந்ததாக கூறப்படும் வழக்குகளை விசாரிக்க ஒரு சிறப்பு புலனாய்வு அதிகாரி நியமிக்கப்பட்டார்.

கடந்த வார இறுதியில் ஆஸ்திரேலியா பாதுகாப்பு படையின் inspector-general பாதுகாப்பு படை தலைமை அதிகாரி Mr Angus
campbell-ளிடம் இறுதி அறிக்கை ஒன்றை அளித்திருந்தார்.

Canberra வில் செய்தியாளர்களை சந்தித்த ஆஸ்திரேலியா prime minister Scott Morrison ,போர் குற்றங்கள் பற்றி inspector-general கூறியிருப்பது போல, இது கால வரையற்ற நேரமாக செல்வதால் புதிய புலனாய்வு ஒன்றை அறிவித்திருந்தார்.

இந்த சிறப்பு புலனாய்வாளர் குற்றசாட்டுகளை பற்றி விசாரிக்கவும் ஆதாரங்களை சேகரிக்கவும் செயல்படுவார். மேலும் அவர் குற்ற சாட்டுகள்
குறித்த ஆதாரங்களை Commonwealth வழக்குகள் இயக்குனரிடம் பரிசீலிக்க குறிப்பிடுவார், என ஆஸ்திரேலியா பிரதமர் Scott Morrison அவர்கள் Canberra-வில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் இயல்பாகவே சிக்கல்கள் நிறைந்த குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் விசாரணைகளும் சிக்கல்களும் உள்ளன.மேலும் இந்த சிறப்பு புலனாய்வு அதிகாரி சர்வதேச சட்டங்களில் அனுபவமுள்ள சிறந்த நபர் ஆவார் என Scott Morrison தெரிவித்துள்ளார்.

மாற்றியமைக்கப்பட்ட விசாரணையின் அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும், அதில் சில “மிருகத்தனமான உண்மைகள்” மற்றும் “கடினமான” செய்திகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த செய்தி ஆஸ்திரேலியாவிற்கும் ,ஆஸ்திரேலியா மக்களுக்கும் கடினமான செய்தியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது விரைவில் நிறைவு பெறாவிட்டால், இந்த புலனாய்வாளரின் வேலைகள் அனைத்தும் ஆஸ்திரேலியாவின் Federal Police (AFP வுடன் இணைந்து பணியாற்றும். மேலும் அடுத்த ஆண்டிற்குள் நிறைவு பெரும் என்று எதிர்பார்க்கபடுகிறது என்று கூறியுள்ளார்.

AFP ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம், பயங்கரவாதம் மற்றும் வெளிநாட்டு தலையீட்டிற்கு பதிலளிப்பதற்கான அதன் முதன்மை பொறுப்புகளில் கவனம் செலுத்த முடியும் என்பதை உறுதி செய்ய நிறுவப்படும்.

இது குறித்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக சென்ற ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு பயணம் செய்த AFP போர் குற்றங்கள் குறித்து விசாரணை
செய்து இருந்தது.

மேலும் ADF கலாச்சார மாற்றத்தை ஏற்படுத்தவும் விசாரணையை மேற்பார்வை இடவும் ஆப்கானிஸ்தான் விசாரணை அமலாக்க மேற்பார்வை குழு ஒன்று நிறுவப்படும்.

முன்னாள் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு inspector-general Vivienne Thom மற்றும் Tasmania இணைந்த இந்த குழு, Linda Reynolds
நிறுவனத்திற்கு காலாண்டு அறிக்கைகளை நேரடியாக வழங்கும்.

இது குறித்து , திரு மோரிசன் கூறுகையில், இங்கு சில குழப்பமான உள்ளடக்கங்கள் உள்ளன. நங்கள் அதை எடுத்து பயன்படுத்த முடியாது அவ்வாறு செய்தால் அது அநியாயமானதாக இருக்கும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

நங்கள் எங்கள் பாதுகாப்பு படைகளுக்கு மிகுந்த மரியாதையை செய்கிறோம். அதே நேரத்தில் நீதிக்கான மிகுந்த மரியாதையையும் பகிர்ந்து
கொள்கிறோம்.கடந்த 2016 ஆம் ஆண்டு NSW உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கும் Major General Paul Brereton, சட்டவிரோதமான கொலைகள் மற்றும் ஆயுத மோதல் சட்டத்தின் பிற மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை தொடங்கினார்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று Major General Paul Brereton ஆப்கானிஸ்தான் விசாரணையால் பாதிக்கபட்டவர்களுக்கு நலவாழ்வு ஆதரவுகள் கிடைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.