Breaking News

அமெரிக்க வம்சாவளி மூலம் சிட்னி ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட பணியாளர்க்கு பாதிப்பு-NSW Health குற்றச்சாட்டு !

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ,சிட்னி ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட பணியாளர்க்கு, அத்தொற்று ஆஸ்திரேலியா மூலம் ஏற்பட்டதல்ல என்று சோதனை மூலம் தெரியவந்துள்ளது என்று NSW Health தெரிவித்துள்ளது.

கடந்த 26 நாட்களுக்கு பின் NSW-வில் சிட்னி ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட பணியாளர் ஒருவருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவருக்கு US இருந்து வந்த ஒருவரின் மூலம் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது . அந்த பெண்ணுக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து தொற்று ஏற்படவில்லை என்பதை NSW Health உறுதி செய்துள்ளது.

இந்த பாதிப்பு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள INTERNATIONAL AIRCREW மூலம் ஏற்பட்ட தொற்று ஆகும். இது குறித்து விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என NSW Health தெரிவித்து உள்ளது.

இந்த தொற்றறு சமூகப் பரவலினால் ஏற்பட்ட தொற்று இல்லை என்பதால் ஒரு நிம்மதியான உணர்வு ஏற்படுகிறது என்று NSW Health Minister Brad Hazzard தெரிவித்தார். கடந்த நான்கு வாரங்களில் ஏற்பட்ட முதல் தொற்று இது எனவும் அவர் தெரிவித்தார்.

நேற்று இரவு 8 மணி அளவில், கடந்த 24 மணி நேரத்தில் 11,128 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன .அதில் வெளிநாடுகளிலிருந்து வந்த 5 பேர் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். Sydney’s Novotel Hotel-இல் பணிபுரியும் பணியாளர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என Deputy Chief Health Officer Jeremy McAnulty தெரிவித்தார்.

கடந்த நவம்பர் 28 முதல் 30ஆம் தேதி தொற்று ஏற்பட்டவரோடு பணிபுரிந்த பணியாளர்கள் மற்றும் அவருடைய வீட்டில் அவருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் அவர்களுக்கு தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.

இந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட தொற்றினால் NSW மற்றும் விக்டோரியா மாகாணங்களுக்கு இடையே உள்ள எல்லைகளை திறப்பதற்கான முடிவு மாற்றப்படுமோ என்ற பயம் ஏற்பட்டது. ஆனால் WA Premier Mark McGowan இந்த வார முடிவிலேயே இதைப் பற்றி முடிவு எடுக்க முடியும் என்று தெரிவித்தார்.

இது குறித்து , Queensland அதிகாரிகள் தெரிவிப்பது என்னவென்றால், எல்லைகள் பயணிகளுக்காக திறந்து இருக்கும் என்றும், இந்த அரசு Sydney-இல் நடக்கும் நிகழ்வுகளை மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.