Breaking News

வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி Mark Meadows கோவிட் தொற்று உறுதி !

Donald Trump-பின் தலைமை பணியாளர் Mark Meadows–க்கு கோவிட் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.Mr Meadows நவம்பர் 3 ஆம் தேதி வரை ஜனாதிபதியுடன் இருந்தார்.

Trump இறுதியாக கலந்து கொண்ட சந்திப்பில் வாக்கு எண்ணிக்கையில் வெற்றி என்று உண்மைக்கு புறம்பாக கூறியபொழுது அவர் முகக்கவசம் அணியவில்லை.Mr Meadows எவ்வாறு பாதிக்கப்பட்டார் என்பது உடனடியாகத் தெரியவில்லை.

கடந்த 24 மணி நேரத்தில் 128,000 புதிய தொற்றுகள் பதிவான சூழ்நிலையில் அவரது நோய் கண்டறியப்பட்டது.

Mr Trump மற்றும் அவரது மனைவி Melania உட்பட பல மூத்த Trump நிர்வாக அதிகாரிகள் சமீபத்தில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்திரிக்கை செயலாளர் Kayleigh McEnany, கொள்கை ஆலோசகர்கள் Steven Miller மற்றும் Hope Hicks ஆகியோர் அக்டோபர் தொடக்கத்தில் இருந்து பாதிக்கப்பட்டுள்ள மூத்த வெள்ளை மாளிகை நபர்களில் சிலர்.

கோவிட் தொற்று உலங்கெங்கிலும் பரவத் தொடங்கியது முதல் உலகில் மற்ற நாடுகளை விட அதிகம் பாதிப்படைந்த நாடு அமெரிக்கா. நாடு முழுவதும் 9.7 மில்லியனுக்கும் அதிகமானோர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் .மேலும் 236,000-ற்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர் .