Breaking News

வெளிநாடுகளில் தவிக்கும் ஆஸ்திரேலியர்கள்,மோரிசன் அரசின் திட்டத்தால் அதிருப்தி !

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் ஆஸ்திரேலியர்கள் நாடு திரும்புவதற்கு மோரிசன் அரசின் ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை என்று அந்நாட்டு மக்கள் கருதுகின்றனர்.

UK, இந்தியா மற்றும் South Africaவில் சிக்கியுள்ள 5000 ஆஸ்திரேலியர்கள், புதிய திட்டத்தின்படி 8 விமானங்களில் நாடு திரும்ப முடியும்.
அவர்கள் வந்தவுடன் வடக்கு மாகாணத்தில் உள்ள Howard Spring Facility-யில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

Sunshine Coast-ல் வழக்கறிஞராகப் பணியாற்றும் 36 வயதான Stefanie Szabo 8 ஆண்டுகளாக துபாயில் பணியாற்றுகிறார்.
மூன்று வயதுடைய ஆண் மற்றும் மூன்று மாத பெண் குழந்தையின் தாய் Stefanie Szabo. இருதரப்பு பயணங்களும் கடினமான சூழ் நிலையில் Ms Szabo-வின் பெற்றோர் இன்னும் தங்களது பேத்தியை பிறந்ததில் இருந்து பார்க்க முடியவில்லை.

ஆஸ்திரேலியர்கள் மோரிசன் அரசின் திட்டத்தின் காரணமாக மாட்டிக்கொண்டார்கள் ,மேலும் Darwin Charter விமான ஒப்பந்தம் புரிந்து கொள்ள தவறிவிட்டது என அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

முதலில் தாய் நாட்டை பற்றி கவலைப்படுங்கள். அதன் பிறகு ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்துதல் பற்றி யோசியுங்கள் என்று மோரிசன் அரசை அவர் விமர்சித்துள்ளார்.இந்த ஒப்பந்தம் பலவீனமானவர்கள் என்று கருதப்படும் ஆஸ்திரேலியர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் என மோரிசன் தனது வாதத்தை முன்வைத்து உள்ளார்.

முதல் இரண்டு விமானங்கள் அக்டோபர் 22 ஆம் தேதி லண்டனிலும், அக்டோபர் 26 ஆம் தேதி புதுடில்லியில் இருந்து புறப்படும் ஒவ்வொன்றும் 175 பயணிகளை கொண்டிருக்கும். Johannesburg இருந்து திரும்பும் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இந்த மூன்று நகரங்களுக்கு அப்பால் சிக்கித் தவிக்கும் பல்லாயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு இன்னும் எந்த திட்டமும் அமல்படுத்தப்படவில்லை.அரசாங்கமும் , நாட்டுத்தூதரகமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அங்கு சிக்கித் தவிக்கும் மக்கள் கருதுகின்றனர்.

குறைந்த தொற்று உள்ள நாடுகளில் இருந்து வருபவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்துதலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என சிட்னியில் இருந்து Hong kong-கிற்கு வந்துள்ள Tara Tubman தெரிவித்தார். இந்த நடைமுறை Hong Kong-ல் சிறப்பாக கையாளப்படுகிறது. இதைப் போல் ஆஸ்திரேலிய அரசும் செய்ய வேண்டும் என அவர் தனது கருத்தை தெரிவித்தார்.