Breaking News

வெளிநாடுகளிலிருந்து ஆஸ்திரேலியா திரும்புபவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்த்தப்படும் !

வெளிநாடுகளிலிருந்து ஆஸ்திரேலியா திரும்புபவர்களின் எண்ணிக்கை இனி வாரத்திற்கு நூற்றுக்கணக்காக உயர்த்தப்படும். இதனால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் ஆஸ்திரேலியர்கள் தாய்நாடு திரும்ப முடியும்.அடுத்த மாதம் முதல் கூடுதலாக 150 நபர்கள் மேற்கு ஆஸ்திரேலியாவிற்கும், 150 பேர் Queenslandற்கும் வரமுடியும் என்று வெள்ளியன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் Prime
Minister Scott Morrison தெரிவித்தார்.

மேலும் ஒவ்வொரு 14-16 நாட்களுக்கும் கூடுதலாக 100 பேர் Adelaide-க்கும் வர அனுமதிக்கப்படுவார்கள். மேலும் ஒவ்வொரு 16-18 நாட்களில் 150 ஆஸ்திரேலியர்களை நாடு திரும்ப உதவும் திட்டம் ACT உடன் முடிவு செய்து ஏற்பாடு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

சர்வதேச வருகையின் வார எண்ணிக்கை தற்போது 6000 ஆக உள்ளது.சர்வதேச பயணங்களை மீண்டும் தொடங்குவதற்கு முன்னர் புதிய வடிவிலான தனிமைப்படுத்துதல்களை சிறிய அளவில் பரிசோதிக்க மாநிலங்களும் பிரதேசங்களும் ஒப்புக்கொண்டன என்று திரு மோரிசன் கூறினார்.

மேலும் லண்டனில் சிக்கிகொண்ட 161 ஆஸ்திரேலியர்களை திரும்பி கொண்டு வரும் விமானம் வெள்ளியன்று டார்வினை அடைந்ததாக திரு.மோரிசன் உறுதிபடுத்தினார்.வெளிநாட்டில் மேலும் 2,800 ஆஸ்திரேலியர்கள் மீண்டும் நாடு திரும்ப மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.

நாடு திரும்ப நினைக்கும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. இந்த வாரம் வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறைக்கு இதுவரை 32,000 மக்கள் தங்கள் பெயர்களை நாடு திரும்புவதற்காக முன்வைத்துள்ளதாக Senate Estimates தெரிவித்துள்ளதது.ஆகஸ்ட் மாத இறுதியில் இந்த எண்ணிக்கை 18,800 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் ஆஸ்திரேலியர்களை அழைத்து வருவதற்காக மத்திய அரசு சிறப்பு விமானங்களை அறிவித்துள்ளது.அவற்றில் ஒன்று வெள்ளிக்கிழமை லண்டனில் இருந்து டார்வினுக்கு வந்தடைந்தது .ஆனால் நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் மக்கள் இந்த நடவடிக்கை மூலம் ஏமாற்றம் அடைந்ததாக தெரிவித்தனர்.

சர்வதேச வருகையை ஏற்பதாக Tasmania அரசு முன் வந்துள்ளது. வரும் வாரங்களில் விக்டோரியாவும் ஏற்கும் என திரு.மோரிசன் தெரிவித்தார்.கொரோனாவின் இரண்டாம் கட்ட தாக்குதல் அடைவதற்கு முன்னர் மெல்பர்ன் நகரமே ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய சர்வதேச நுழைவு வாயிலாக இருந்தது.

மேற்கு ஆஸ்திரேலியாவை தவிர்த்து அனைத்து மாநிலங்களிலும் கிறிஸ்துமஸ்க்குள் உள் நாட்டு எல்லைகளை மீண்டும் திறக்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.முன்னதாக வெளி நாடுகளில் சிக்கித் தவிக்கும் ஆஸ்திரேலியர்களின் அடையாளங்கள் மூன்றாவது முறையாக தற்செயலாக வெளியிடப்பட்டது தெரிய வந்துள்ளது.இது மீண்டும் நடக்காமல் இருக்க தனது துறை தீவிரமாக செயல்படும் என வெளியுறவு துறை அமைச்சர் Marise Payne தெரிவித்து உள்ளார்.