Breaking News

வெற்றிகரமாக இரண்டாம் நாளாக நியூ சவுத் வேல்ஸில் எந்த ஒரு புதிய நோய் தொற்றும் ஏற்படவில்லை !

ஆஸ்திரேலியாவில் கடந்த சில வாரங்களாகவே நோய்தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், இப்போது நியூ சவுத் வேல்ஸில் தொடர்ந்து இரண்டு நாட்களாக எந்த ஒரு புதிய கொரானா தொற்றும் ஏற்படவில்லை.

24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 6353 பேருக்கு கொரானா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அதில் எந்த ஒரு நபருக்கும் கொரானா இல்லை என்பது உறுதியாகி உள்ளது. இந்த பரிசோதனை எண்ணிக்கை என்பது இதற்கு முன் 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட எண்ணிக்கையை ஒப்பிட்டு பார்க்கையில் அதில் பாதி அளவு மட்டுமே.

கடந்த ஜூன் 10-ஆம் தேதிக்கு பிறகு இந்த ஞாயிற்றுக்கிழமை மட்டுமே எந்த ஒரு புதிய நோய்த்தொற்றும் இல்லாமல் இருப்பது மக்களை பெருமூச்சு விட வைத்துள்ளது.

NSW வின் சுகாதாரத்துறை திங்கட்கிழமை அன்று மக்களை கேட்டுக் கொண்டதன் படி யாருக்கேனும் தொடர் சளி, தொண்டை கரகரப்பு, இருமல் மற்றும் தொடர் காய்ச்சல் என இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் மேலும் ஊரடங்கு தளர்த்தப்படுவது பற்றி Premier Gladys Berejiklian ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது,” சுதாரத் துறை நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து அதன்படி ஊரடங்கு தளர்த்தப்படுவது பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்திருந்தார்.

NSW மக்களின் உடல் நலத்தையும், பாதுகாப்பையும் பேணிக்காப்பது நமது முதல் கடமை, அதே சமயம் மிக விரைவிலேயே பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளை மீட்டெடுப்போம் என அவர் பேசுகையில் தெரிவித்திருந்தார்.

NSW வின் தற்போதைய கொரானா நிலவரப்படி, மொத்தம் 63 பேருக்கு கொரானா தொற்று இருப்பதாகவும், அதில் 3 பேர் தீவிரமான சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், வென்டிலேட்டர் வைத்து சிகிச்சை பெரும் நோயாளிகள் யாரும் இல்லை. மேலும் 87% பேர் NSW வின் சுகாதார கட்டுப்பாட்டின் கீழ் சிகிச்சை பெற்றுக் கொண்டு வருகின்றனர்.

மேலும் இதுவரையில் NSW வில் கொரானா பாதிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உள்ளது.