Breaking News

விரைவில் பள்ளிக்கூடங்கள் திறப்பு அரசு அறிவிப்பு !

விக்டோரியா அரசு சுகாதாரத்துறையின் அறிக்கையின்படி ,கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 9ஆக பதிவாகி உள்ளது.மரணமடைந்தவர் யாரும் இல்லை. இதனைத் தொடர்ந்து விக்டோரிய அரசு பள்ளிக்கூடங்களை வரும் அக்டோபர் 26 முதல் மாணவர்களுக்கு திறக்க திட்டமிட்டுள்ளது.

உடல் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு அக்டோபர் 12 அன்று ஏழாம் ஆண்டு மாணவர்கள்,ஆரம்ப பள்ளி மற்றும் உயர் நிலை பள்ளி மாணவர்கள் போல் நேரடி பயிற்சி மேற்கொள்வார்கள்.8 மற்றும் 10 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 26 முதல் பயிற்சிகள் தொடங்கும்.

நேரடி பயிற்சி தொடங்குவதால் இந்த நாள் மிகச் சிறப்பான நாள் என்று கல்வி அமைச்சர் James Merlino தெரிவித்தார்.மேலும்
மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கட்டாய முகக்கவசமும், மாணவர்கள் பாதுகாப்பாக பள்ளி வந்து மீண்டும் பாதுகாப்பாக வீடு திரும்பவும் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

திங்கள் அன்று உறுதியான 9 கொரோனா தொற்றுகளில் ஒன்று விக்டோரியாவின் Shepparton நகரில் ஏற்பட்டுள்ளது.விரைவாக செயல்படுத்தப்படும் கொரோனா சோதனைகள் சில சமயம் சரியான முடிவுகளைத் தருவதில்லை.அதனால் அவை மறு பரிசோதனை செய்யப்படும் என சுகாதார அதிகாரி Brett Sutton தெரிவித்தார்.

இதனால் விக்டோரியாவில் தொற்று 14 நாட்களில் சராசரியாக 0.3 cases உயர்ந்துள்ளது.மெல்பர்ன் நகரில் 11.9-இல் இருந்து 11.6 ஆக குறைந்துள்ளது.மொத்தம் 24 வழக்குகளும் Butcher club மற்றும் Chadstone Shopping Centre cluster-ல் தொடர்புடையது. இதில் 9 பேர் குடும்ப உறுப்பினர்கள், 7 ஊழியர்கள் 3 வாடிக்கையாளர்கள் என தெரிய வந்து உள்ளது.

மெல்பர்ன் நகரில் செப்டெம்பர் 19 முதல் அக்டோபர் 2 வரை 13 மர்ம வழக்குகள் இருந்தது. விக்டோரியாவில் ஏதும் பதிவாக வில்லை.
மெலபர்ன் நகரில் அக்டோபர் 19 அன்று கட்டுப்பாடுகளை தளர்த்த அதன் 14 நாள் சராசரியாக ஐந்திற்கும் குறைவாக இருப்பது அவசியம் .
தொடர் முயற்சியால் பரவலைத் தடுத்து நோயாளிகளையும், முதியோர்களையும் தாக்காமல் காத்தால் இந்த இலக்கை விரைவாக அடையலாம் என Sutton தெரிவித்துள்ளார்.

சுகாதார ஊழியர்களில் முதியோர் பாரமரிப்பு ஊழியர்கள் 15 பேரும், செவிலியர்கள் 13 பேரும் ஒரு மருத்துவரும் கொரோனாவால் தாக்கப்பட்டுள்ளனர்.மாநிலத்தில் இறப்பு எண்ணிக்கை 806. தேசிய அளவில் மொத்த இறப்பு எண்ணிக்கை 894ஆக பதிவாகி உள்ளது.
கடந்த 10 நாட்களில் உள்ளூர் மக்களால் எந்த பரவலும் ஏற்படவில்லை. ஒரு வெளிநாட்டு பயணியால் ஒரு பாதிப்பு ஏற்பட்டுஉள்ளது.
தற்போது Queensland-ல் எந்த பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடற்கரையில் பாதுகாப்பின்றி கூட்டம் சேரும் வீடியோ பதிவுகள் கிடைத்துள்ளதால், காவல் துறை கடற்கரையில் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளது.இந்த பேரிடரை போக்க பலர் போராடிக்கொண்டிருக்கையில் இந்த மாதிரி செயல்கள் பின்னடைவை ஏற்படுத்திவிடும் என திரு Andrews தெரிவித்துள்ளார்.மேலும் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும் வலியுறுத்தி உள்ளார்.