Breaking News

விக்டோரிய வணிகங்கள் மீண்டும் திறக்க அனுமதி !

விக்டோரிய வணிகங்கள் மீண்டும் திறக்க அனுமதி !

கடந்த நான்கு மாதங்களாக எந்த ஒரு புதிய தொற்றும், உயிர்பலியும் இல்லாத சூழ்நிலையில் Melbourne-னில் உள்ள அனைத்து சில்லறை வியாபாரம் மற்றும் வணிகங்கள் மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புதன் முதல் “four reasons to leave home” விதியும் ரத்து செய்யப்படும்.இதனால் விக்டோரிய மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக் காரணம் தேவை இல்லை. 10 பேர் வரை வெளியே கூடுவதற்கு அனுமதி.

ஆனால் விக்டோரிய பொதுமக்கள் வீட்டில் கூடுவது பற்றிய விதிமுறைகளை அறிய செவ்வாய் வரை காத்திருக்க வேண்டும் என Daniel Andrews தெரிவித்துள்ளார்.மேலும்,இனி ஏற்பாடுகளை சீர் செய்வதும் அதை எளிமைப்படுத்துவதும் தான் நாம் செய்யவேண்டியது என்று உணர்ச்சிகரமாகத் தெரிவித்தார்.

செவ்வாய் இரவு 11:59 முதல் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு Melbourne-னில் உள்ள cafes,உணவகங்கள், pubs மீண்டும் திறக்கப்பட்டு 50 பேர் வரை அனுமதிக்கப்படும்.தனி நபர் இடைவெளி கடைபிடித்தல் வேண்டும்.அழகு மற்றும் personal care சேவைகள் மீண்டும் தொடங்கலாம்.ஆனால் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

திருமணத்தில் 10 பேரும். இறுதிச் சடங்கில் 20 பேரும் பங்கு பெற அனுமதி. உட்புற மத நிகழ்ச்சிகளில் 10 பேரும் வெளிப்புற நிகழ்ச்சியில் 20 பேரும் அனுமதி. நவம்பர் 8 முதல் மற்ற கட்டுப்பாடுகள் நீக்கப்படும்.

உடற்பயிற்சி கூடங்கள் நவம்பர் 8 முதல் மீண்டும் திறக்கப்படும்.எட்டு சதுர அடிக்கு ஒருவர் என்ற இடைவெளி கட்டுப்பாடுடன் அனுமதி.
விருந்தோம்பல் நிகழ்ச்சிகளில் உட்புறத்தில் 40 பேரும் வெளிப்புறத்திற்கு 70 பேரும் அனுமதி. வெளிப்புற மத நிகழ்வு மற்றும் இறுதிச் சடங்கிற்கும் 50 பேர் வரை அனுமதி.இந்த தளர்வுகளில் விக்டோரிய மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்.

கிறிஸ்துமஸுக்குள் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு இந்த தளர்வுகள் முதல் முயற்சி என்று Premier Daniel Andrews தெரிவித்தார்.
Victorian chamber of Commerce and Industry தலைமை அதிகாரி Paul Guerra, அரசின் அறிவிப்பை தொடர்ந்து வணிக உரிமையாளர்களிடையே நம்பிக்கையின் புத்துணர்ச்சி இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

இந்த ஊரடங்கு தளர்வினால் விருந்தோம்பல், அழகு மற்றும் சில்லறை வணிக உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நவம்பர் 8 முதல் நாம் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்து மக்கள் ஒன்றிணைவோம் என்பது விக்டோரிய மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய சில்லறை விற்பனையாளர் சங்கம் இந்த அறிவிப்பை வரவேற்றது.கிறிஸ்துமஸ் இல்லாத விக்டோரியாவை கனவில் கூட காண இயலாது.ஒவ்வொரு மாநிலங்களிலும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் என்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். கிறிஸ்துமஸ் ஷாப்பிங்கிற்காக விக்டோரியா திறக்கப்படும்.

இந்த கிறிஸ்துமசை pub-ல் கொண்டாட விக்டோரிய மக்கள் “get on the beers” என்ற hashtaga-ஐ twitter-ல் trend செய்து வருகின்றனர்.
ஞாயிற்றுகிழமை பதியப்பட்ட ஏழு புதிய தொற்றுகளில் ஆறு வடக்கு புறநகர் cluster உடன் தொடர்புடையது. இதில் 11 வீடுகளில் 39 தொற்றுகள் பதிவாகியுள்ளது. தொடர் பரிசோதனைகளுக்குப் பிறகு புதிய நோய் தொற்றுகள் கண்டறியப்படவில்லை.

இந்த எண்ணிக்கைகள் மூலம் பெருவாரியான சமூகப் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று நாங்கள் நம்புவதாக Daniel Andrews தெரிவித்தார்.