Breaking News

விக்டோரியா ,NSW-விற்கு இடையே புதிய போக்குவரத்து முறையை அமல்படுத்தியது !

NSW-வில் உள்ள விக்டோரியர்கள் திங்கள்கிழமை இரவு 6 மணி முதல் தங்களது பயணத்தை மேற்கொள்ள முடியும், அதற்காக அரசாங்கம் ஒரு புதிய “traffic light” முறையை மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.கொரோனா வைரஸ் அபாயத்தைப் பொறுத்து ஆஸ்திரேலியாவின் பச்சை, ஆரஞ்சு அல்லது சிவப்பு மண்டலங்களின் பிற பகுதிகளை நியமிக்கும் அனுமதிகள் திங்கள்கிழமை மாலை 6 மணி முதல் இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வரவிருக்கிறது .

சிட்னி மற்றும் பிரிஸ்பேன் ஆகியவை சிவப்பு நிறத்தில் உள்ளன, இருப்பினும் இவை அனைத்தும் வாரத்தின் கடைசியில் மாறும் என்று Premier Daniel Andrews கூறினார்.பிரிஸ்பேனில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் இன்று மாலை 6 மணிக்கு அமலுக்கு வந்தாலும், பிரிஸ்பேனிலிருந்து மக்கள் விக்டோரியாவுக்குத் திரும்ப முடியும் என்று பொது சுகாதாரக் குழவிற்கு 100 % நம்பிக்கை இல்லை என்று அவர் கூறினார்.

மாநிலங்களுக்கு இடையேயான பயணத்தைத் திட்டமிடும் விக்டோரியர்கள் தங்கள் பயணங்களில் மாற்றம் இருக்கும் என்பதை உணரவேண்டும் என்று கூறினார்.தடுப்பூசிகள் இல்லை என்பதனால் இந்த மாற்றங்கள் அவசியமான ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார் .

எதிர்க்கட்சித் தலைவர் Michael O’Brien பசுமை மண்டலப் பகுதிகளிலிருந்து திரும்புவதற்கான அனுமதி முக்கியத்துவத்தை massive overreach என்று குறிப்பிட்டுள்ளார் .இது ஒவ்வொரு விக்டோரியர்களின் வாழ்க்கையையும் அரசாங்கம் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

தற்போது மாநிலத்தின் மொத்த வழக்குகள் 40ஆக உள்ளது .குழந்தைகளுக்கு கடுமையான நோய் வருவதற்கான ஆபத்து மிகக்குறைவு என்று விக்டோரியாவின் Chief Health Officer Brett Sutton கூறினார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை விக்டோரியாவில் மட்டும் 18,660 பரிசோதனைகள் நடத்தப்பட்டது.

Traffic Light விதிமுறையின் செயல்பாடு :

சிவப்பு மண்டலம்: கடந்த 14 நாட்களில் சிவப்பு மண்டலத்தில் இருந்த யாராக இருந்தாலும் விக்டோரியாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .மீறி நுழைந்தால் $4,957 அபராதம் விதிக்கப்படும்.பிரிஸ்பேன் மற்றும் சிட்னி ஆகியவை தற்போது சிவப்பு மண்டலங்களாக கருதப்படுகின்றன .

ஆரஞ்சு மண்டலம்:இந்த மண்டலத்தில் வசித்தவர்கள் வெளிமாநிலங்களுக்கு செல்ல விண்ணப்பிக்கலாம் ,மேலும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் .14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் .தற்போது NSW இந்த மண்டலத்திற்கு கீழ் அடங்குகின்றது .

பச்சை மண்டலம்: வெளிமாநிலங்களுக்கு செல்ல அனுமதிக்கு விண்ணப்பித்து விக்டோரியாவில் நுழையலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.