விக்டோரியாவில் 3 கொரோனா வைரஸ் இறப்புகள் ஏற்பட்டுள்ளன, மாநிலத்தின் எண்ணிக்கை 766 ஆகவும், தேசிய எண்ணிக்கை 854 ஆகவும் உள்ளது, மேலும் 28 புதிய வழக்குகளும் பதிவாகி உள்ளது. ஆனால் 14 நாள் சராசரி கணக்கீட்டில் வழக்குகள் 32.8 ஆக குறைந்து வருகிறது,
அடுத்த திங்கட்கிழமை மெல்போர்னின் தொற்று எண்ணிக்கை சராசரியாக 30-50க்கு இடையில் இருந்தால் தான் நான்றாம் கட்ட தளர்வுகளை எதிர்பார்க்க முடியுமென்று அரசு தெரிவித்துள்ளது. செப்டம்பர் 6 முதல் 19 வரை மெல்பார்னில் 45 தொற்றுகள் பதிவாகியுள்ளது.
செப்டம்பர் 8 ஆம் தேதி முதலில் அறிவிக்கப்பட்ட 5 புறநகர் தொடர்பு கண்காணிப்பு பிரிவுகளில் , அடுத்த 3 சில நாட்களில் செயல்படும் என்றும் பிரதமர் அறிவித்தார்.அவை மேற்கு, வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் அமல்படுத்தப்படுமென்று அறிவிக்கபட்டுள்ளது.விக்டோரியாவின் மூத்த குடிமக்களுக்கான பராமரிப்புத் துறைக்கு $ 30 மில்லியன் மேம்பாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது, 33 பொது வசதிகளுக்காகவும்,மற்றும் 17 மெல்போர்னில் செலவிடப்பட வேண்டுமென்று அரசு தெரிவித்துள்ளது.
இரண்டாம் கட்ட COVID-19 பரவலின் போது டேனியல் ஆண்ட்ரூஸ் கையாண்ட விதத்தை பெரும்பாலான விக்டோரியர்கள் ஆதரவு அளித்துள்ளார்கள்.கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு ஆஸ்திரேலியா மக்கள் இதை ஆதரிக்கிறார்கள். ஹோட்டல் தனிமைப்படுத்துதலில் உருவான இரண்டாம் கட்ட பரவலையும் சரியான வழிமுறையால் அடக்கினார் என்று 62 சதவீதம் மக்களின் ஆதரவை பெற்றுள்ளார் Andrews.
திங்களன்று மெல்போர்ன் அதன் அடுத்த கட்டத்திற்கு செல்லுமா என்பதை அரசு இன்னும் உறுதிப்படுத்தவில்லை, இத்தளர்வுகள் சில மாணவர்கள் பள்ளிக்கு திரும்புவதற்கும் மேலும் பணியிடங்களை மீண்டும் திறக்க அனுமதிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் Michael O’Brien கூறுகையில், அக்டோபர் 26 ஆம் தேதி வரை மெல்பர்னியர்கள் காத்திருக்க முடியாது, 9 மணி முதல் 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு போன்ற கடுமையான விதிமுறைகள் ரத்து செய்யப்பட வேண்டும்.டேனியல் ஆண்ட்ரூஸ் நிபுணர்களைக் கேட்டு நடந்துகொள்ள வேண்டும், அவர்கள் ஆலோசனைபடி நடந்துகொள்ள வேண்டுமென்று Michael கூறிவுள்ளார்.
Casey cluster உள்ளவர்களுக்கு அபராதம் விதித்தால் இறுதியில் விக்டோரியாவின் பில்லியன் டாலர்கள் செலவாகும் என மாநில முதல்வர் கூறிவுள்ளார். கிளஸ்டரில் சிலர் வீட்டிலிருந்து 5 கி.மீ.க்கு மேல் பயணம் செய்து பிற வீடுகளுக்குச் சென்று கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக கடந்த வாரம் ஓர் குற்றச்சாட்டு எழுந்தது. இதை முன்னிட்டு $ 1652 அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மெல்போர்னில் 5 புறநகர் தொடர்பு கண்காணிப்பு குழுக்கள் எந்த சமயங்களில் செயல்படும் என்பதும் தெளிவாக இல்லை, மற்றும் செப்டம்பர் 8 ஆம் தேதி Andrews தொடர்புத் தடமறிதலை(tracing boost) அறிவித்தார், ஆனால் திங்களன்று அவை எப்போது தொடங்கும் என்று சொல்ல முடியவில்லை என்று மெல்போர்ன் மக்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.