Breaking News

விக்டோரியாவில் 12 புதிய கொரோனா தொற்று, இரண்டு மரணங்கள் பதிவு !

கொரோனா தொற்று காரணமாக இன்று இரண்டு பேர் மரணமடைந்துள்ளனர், இதனால் மாநில அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 773 ஆக இருக்கின்றது.

இறந்தவர்கள் இருவரும் 80 வயதுக்குட்பட்ட பெண்கள் எனவும் செய்திகள் வெளிவந்துள்ளது. அதனால் வயதானவர்களை இந்த தொற்றிலிருந்து எப்படி பாதுகாக்கலாம் என்றும்,எப்படி பராமரிக்கலாம் என்றும் ஆலோசித்து வருகின்றனர்.

மெல்போர்னில் கடைசி 14 நாட்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32.8லிருந்து 26.7 ஆக குறைந்துள்ளது.

விக்டோரியாவின் சராசரி எண்ணிக்கை 1.6 லிருந்து 1.1 ஆக குறைந்துள்ளது. அரசாங்க பகுதிகளிலும் 20 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அனைத்தையும் கணக்கிட்டு பார்த்தால் விக்டோரியாவில் தற்போது 20,076 கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர்.

விக்டோரியாவில் இந்தப் கொரோனா தொற்று ஆரம்பகாலத்தில் இருந்து இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன. நேற்று மட்டும் 13337 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் நடுவே Ms Mikakos ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா தொற்று நோயாளிகளுக்கான விசாரணையை துவங்குகிறார். தற்போது மாநிலம் முழுவதும் 532 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.