Breaking News

விக்டோரியாவில் மூன்று புதிய தொற்றுகள் உறுதி ! அதில் ஒருவர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் என சந்தேகம்!

கடந்த 24 மணி நேரத்தில் விக்டோரியாவில் மூன்று புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளது.ஆனால் மர்ம வழக்குகளின் எண்ணிக்கை பத்தாக குறைந்துள்ளது.

இரண்டு வார சராசரி எண்ணிக்கை மெல்பர்னில் 6.2 ஆகவும், பிராந்திய விக்டோரியாவில் 0.4 ஆகவும் குறைந்துள்ளது என்று சுகாதார அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். புதிதாக இறப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை. மாநிலத்தின் இறப்பு எண்ணிக்கை 817 ஆக உள்ளது.

ஜுலை மாதத்தில் கோவிட் பாசிடிவ் என்று கண்டறியப்பட்டவர், மீண்டும் கடந்த செவ்வாய் அன்று எடுக்கப்பட்ட பரிசோதனையில் பாசிடிவ் என்று பதிவாகி உள்ளது. அவர் மீண்டும் புதிய தொற்று எண்ணிக்கையாகவே கருதப்படுவார் என்று விக்டோரியன் Premier Daniel Andrews தெரிவித்து உள்ளார்.

அவர் கொரோனா வைரசால் இரண்டாவது முறை தாக்கப்பட்டதாகவே நாங்கள் கருதுகிறோம். உலகில் பல இடங்களில் கொரோனா வைரஸ் இரண்டாவது முறையாக தாக்கியதற்கான அறிக்கைகள் வந்துள்ளன. ஆனால் ஆஸ்திரேலியாவில் இது தான் முதல் முறை.

மருத்துவ வல்லுனர்கள் இந்த பாதிப்பு மீண்டும் புதிதாக ஏற்பட்டதா அல்லது பழைய பாதிப்பு சற்று அடங்கி மீண்டும் வந்ததா என்று ஆய்வு செய்து வருவதாக திரு ஆன்ட்ரூஸ் தெரிவித்தார்.

நவம்பர் 2 முதல் திட்டமிட்டபடி தளர்வுகள் செயல்படுத்தப்படும். Melbournனில் உள்ள அனைத்து சில்லறை மற்றும் hospitality வணிகங்கள் மீண்டும் திறக்கப்படும். இந்த வார இறுதியில் cox plate குதிரைப் பந்தயத்தில் ஆயிரத்திற்க்கும் அதிகமானோர் பங்கு பெறலாம் என்ற முடிவு பலத்த எதிர்ப்புக்கு இடையில் பின் வாங்கப்பட்டது.

New South Walesஇல் செவ்வாய் அன்று 24 மணி முதல் இரவு 8 மணி வரை உள்நாட்டில் இரண்டு புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.