Breaking News

விக்டோரியாவில் புதிய கொரோனா தொற்றும் உயிர்பலியும் இன்றி இந்த வாரம் கடந்துள்ளது !

Melbourne-னில் இரண்டு வார சதவீதம் 1.4-ல் இருந்து 1.3 ஆக மேலும் குறைந்துள்ளது. இரண்டு மர்ம தொற்றுகள் மட்டும் உள்ளது.பிராந்திய பகுதிகளில் தொற்று எதுவும் இல்லை.

பிப்ரவரிக்கு பிறகு விக்டோரியாவில் முதல் முறையாக தொற்றுகளும் உயிர் பலிகளும் இல்லை.

இந்த புள்ளிவிவரங்கள் சுவாரசியமாக இருந்தாலும் கொரோனாவிற்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை என Premier Daniel Andrews தெரிவித்தார்.

விக்டோரியர்களுக்கு ஞாயிற்று கிழமை சாலை வரைபட மாற்றத்தை அறிவிக்கும்பொழுது கட்டுப்பாடுகள் தளர்த்துவது குறித்து தெரிவிப்பதாக Premier Daniel Andrews தெரிவித்தார்.25 கி.மீ Melbourne பயண வரம்பும் விக்டோரியாவை மற்ற பகுதிகளில் இருந்து பிரிக்கும் “ring of steel” முடிவுக்கு வர உள்ளது.

உணவகங்கள் மற்றும் cafes ஆகியவற்றை சுற்றி “சில தளர்வு மாற்றங்கள் ” இருக்கும் என்றும் நவம்பர் மாத பிற்பகுதியில் அரசாங்கம் செய்ய விரும்பும் மாற்றங்களை அறிவிப்பதாக திரு ஆண்ட்ருஸ் அறிவித்தார்.

கடந்த வாரத்தில் உள்நாட்டில் வாங்கிய ஆறு தொற்றுகளை NSW தெரிவித்துள்ளது. 68 கோவிட் தோற்று ஏற்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிர சிகிச்சையில் வென்டிலேட்டரில் ஒரு நோயாளி அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

விக்டோரியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 15ஆக உள்ளது. ஜுன் 15 முதல் முதியோர்களுக்கு தொற்று எதுவும் இல்லை.
தொற்று ஏற்பட்டு இரண்டு நோயாளிகள் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் 18,671 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.