Breaking News

விக்டோரியாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கொரோனா தொற்று ஏதும் இல்லை !

மூன்றாவது நாளாக விக்டோரியாவில் கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை, உயிர்பலியும் இல்லை.

Melbourne-னின் 14 நாள் சராசரியாக 1.9 தொற்றாக ஆக குறைந்தது.அக்டோபர் 30 முதல் பதினைந்து நாட்களில் ஒரே ஒரு மர்ம தொற்று பதிவாகி உள்ளது.கொரோனா வைரஸால் மாநிலத்தின் இறப்பு எண்ணிக்கை 819, தேசிய எண்ணிக்கை 907 ஆகவும் உள்ளது.

அடுத்த வாரத்திற்குள் தற்பொழுது செயலில் உள்ள தொற்றுகள் சில டஜன்களாக குறையும் என தலைமை சுகாதார அதிகாரி Brett Sutton தெரிவித்தார்.ஆகஸ்ட் மாத மத்தியில் செயலில் இருந்த வழக்குகள் 7000 ஆக அதிகரித்து இருந்தது.

அது தற்போது 61 ஆக குறைந்துள்ளது. இந்த தரவுகள் தொடருமானால் சில தொழில்களுக்கான cap limits மற்றும் Density Quotas உயர்த்தப்படும் என டாக்டர் சுட்டன் தெரிவித்தார்.

அடுத்த ஞாயிறுக்குள் மேலும் சில தளர்வுகள் வழங்கப்படும். மாகாணங்களைப் பிரிக்கும் “ring of steel” அகற்றப்படும். 25 கிலோமீட்டர் கட்டுப்பாடு நீக்கப்படும். மேலும்,நவம்பர் 8 என்ன தளர்வுக்ள இருக்கும் என்பது இந்த வார முடிவை பொறுத்தது என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.

Dr Sutton அவர்களின் பாணியிலான Melbourne ஊரடங்கு விதிகளை அதன் வெற்றியை தொடர்ந்து Ireland-தும் நடைமுறைபடுத்த எண்ணுகிறது.மேலும்,ஐரோப்பாவின் மோசமான சூழ்நிலை விக்டோரியாவின் இந்த வெற்றியை பிரதிபலிக்க ஒரு காரணம் என்று அவர் தெரிவித்தார்.