Breaking News

விக்டோரியாவில் கொரோனா தொற்றுகள் ஏதும் இல்லாததை தொடர்ந்து கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படுகிறது !

மாநிலத்தில் கோவிட்-19 தொற்று ஒன்று மட்டுமே பதிவாகியுள்ள நிலையில் விக்டோரியாவின் எல்லையை திறக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என Premier Daniel Andrews தெரிவித்தார்.

இந்த ஒரு தொற்றை நீக்கிவிட்டால்,கடந்த செவ்வாய் கிழமை கோவிட் தொற்று இல்லாத நாளாக இருக்கும் . இப்படி நடந்து வெகுகாலம் ஆகிவிட்டது என திரு ஆன்ட்ருஸ் தெரிவித்தார்.மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு விக்டோரியனின் கடின உழைப்பே இதற்கு காரணம் என அவர் பெருமிதம் கொண்டார்.

இதனை தொடர்ந்து நவம்பர் 2 முதல் திட்டமிடப்பட்டுள்ள சில்லறை வணிகத்தை துவங்குதல், hospitality தொழிற்சாலை திறப்பது போன்ற தளர்வுகள் வழங்கப்படும். AFL Grand Final-க்கு pub-களை திறந்துவிடுவது சாத்தியமில்லை எனவும் ஆன்ட்ருஸ் தெரிவித்தார்.

Melbourneஇல் கடந்த இரண்டு வாரங்களில் புதிய தொற்றுகள் சராசரியாக 7 முதல் 6.4 வரை குறைந்துள்ளது.மர்ம தொற்றுகள் எண்ணிக்கை 2 முதல் 13 வரை குறைந்துள்ளது.

செவ்வாய் அன்று இறப்பு எதுவும் பதிவாகவில்லை. மாநிலத்தின் இறப்பு எண்ணிக்கை 817,தேசிய அளவு இறப்பு எண்ணிக்கை 905.
11 விக்டோரியர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் யாரும் தீவிர சிகிச்கை பிரிவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில் இருந்து திரும்பி வருபவர்களை ஹோட்டலில் தனிமைப்படுத்தி வைப்பதற்கு பதிலாக மின்னணு கருவிகளை பயன்படுத்தலாம் என அரசு எண்ணுவதாக Andrews கூறியுள்ளார்.

பிரபல மனித உரிமை வழக்கறிஞரும் ,லிபர்ட்டி விக்டோரியாவின் தலைவருமான Julian Burnside, மின்னணு கண்கானிப்பை நல்ல முடிவாக தனது ஆதரவை கூறினார்.

Liberal Democrats MP David Limbrick, இதுபோன்ற சாதனங்களை அணியுமாறு மக்களை கட்டாயப்படுத்துவது கடுமையானது என்றார்.
இதற்கிடையில் சுமார் 250 பேர் hepatitis B,C மற்றும் HIV பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

சோதனைகளில் ஒரு முறை பயன்படுத்தப்பட்ட ஊசிகள் மீண்டும் பயன்படுத்தப்படவில்லை. ஆகையால் மாசு ஏற்படும் என்ற பயம் தேவை இல்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் Martin Foley தெரிவித்துள்ளார்.