Breaking News

விக்டோரியாவில் ஐந்து புதிய தொற்றுகள் ! புறநகர்ப் பகுதிகளுக்கு எச்சரிக்கை !

கடந்த 24 மணி நேரத்தில் விக்டோரியாவில் உள்ள ஐந்து புறநகர் பகுதிகளில் 500 குடியிருப்பாளர்களில் ஒரு பள்ளி மாணவன் கோவிட் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மொத்தம் ஐந்து புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளது.

அந்த மாணவன் East Preston Islamic college-ல் பயில்பவன்.அந்த பள்ளி காலவரையறையின்றி மூடப்பட்டு சுத்தம் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.மேலும் அந்த மாணவனுடன் தொடர்பில் இருந்த 73 பேர் தனிமை படுத்தப்பட்டனர்.

வியாழன் அன்று பதிவான அனைத்து தொற்றுகளும் இதற்குமுன் மெல்பர்னில் பதிவான தொற்றுகளுடன் தொடர்புடையவை.
நகரத்தின் இரண்டு வார பாதிப்புகள் சராசரியாக 6.1 சதவீதமாக குறைந்துள்ளது. மாநில விக்டோரியாவில் 0.4 ஆக இருந்தது.புதிதாக இறப்புகள் பதிவாகவில்லை. மாநிலத்தின் இறப்பு எண்ணிக்கை 817 ஆக உள்ளது.

அக்டோபர் 19 முதல் பதினைந்து நாட்களில் தொற்றின் மூலம் அறிய முடியாத தொற்றுகள் பத்து உள்ளன.அறிகுறிகளை கண்காணிக்க விக்டோரிய சுகாதார மற்றும் மனித சேவை துறை ஐந்து புறநகர்களை தேர்வு செய்துள்ளது.Dallas,Roxburgh park, Broad meadows,Preston மற்றும் மேற்கு Heidelberg.

இதற்கிடையில் Broadmeadows-ல் உள்ள ஒரு சமூக வீட்டுவசதி தொகுதியில் ஒருவர் தொற்று உறுதியான நிலையில் 120 குடியிருப்பாளர்கள் 48 மணி நேரம் தனிப்படுத்தப்படுகிறார்கள்.இது மிகுந்த எச்சரிக்கையான அணுகுமுறை என்று மாநிலத்தின் Commander of Testing Jeroen Weimer வலியுறுத்தியுள்ளார்.

சமூகம் இந்த சூழ்நிலையை புரிந்துகொண்டு குடியிருப்பவர்கள் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.இந்த பரவலை இஸ்லாமிய மக்களுடன் தொடர்புப்படுத்தி பேசுவதை கண்டித்த விக்டோரியாவின் Premier Daniel Andrews. இது மதத்திற்கு அப்பாற்பட்டது என்று தெளிவுப்படுத்தி உள்ளார்.

Dallas Brooks Primary பள்ளியிலும் தொற்று கண்டறியப்பட்டதால். அப்பள்ளி மூடப்பட்டு சுத்தம் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பற்றிய விழிப்புணர்வு புறநகர் பகுதி மக்களுக்கு ஏற்படுத்த புதிதாக ஒரு திட்டம் வியாழன் முதல் தொடங்கப்படும்.
புதன் அன்று விக்டோரியாவின் எந்த மரணமும் பதிவாகவில்லை.

ஆறு நாட்களாக தொடர்ந்து 6 தொற்றுகளுக்கு குறைவாக பதிவாகி வருவதால் விக்டோரிய அரசு ஞாயிறு சிறிய தளர்வுகளை அறிவிக்க உள்ளது.