Breaking News

விக்டோரியாவிற்கு வரும் நியூசிலாந்து மக்கள் தனிமைப்படுத்த தேவையில்லை !

NSW மற்றும் வடக்கு மாகாணம் மட்டுமே Trans-tasman Bubble-ஐ ஒத்துக்கொண்டுள்ள நிலையில், சிட்னிக்கு வந்த சுமார் 90 நியூசிலாந்து பயணிகள் விக்டோரியா,மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் Tasmaniaவிற்கு பறந்துள்ளனர்.

விக்டோரியாவுக்கு வந்த நியூசிலாந்தவர்களின் எண்ணிக்கை 17-ல் இருந்து 55 ஆக உயர்ந்தது என்று Premier Daniel Andrews கூறியது, மாநிலத் தலைவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிலர் Hobart, Adelaide, மற்றும் perth ஆகிய இடங்களுக்கு வந்துள்ளனர். அங்கு 14 நாள் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
நியூசிலாந்து பயணிகள் நாட்டிற்குள் நுழைய அனுபதிக்கப்பட்ட பிறகு அவர்கள் மாநிலங்களுக்குள் பயணிக்க தடையில்லை என்று சர்வதேச பயணிகளின் வருகையை நிர்வகிக்கும் உள்துறை செயலாளர் Mike Pezzullo கூறியுள்ளார்.

இதற்கிடையில் ,நியூசிலாந்து மக்கள் சிட்னியை அடைந்த பிறகு ,மற்ற இடங்களுக்கு செல்ல அனுமதி உள்ளது என்பதை விக்டோரிய மக்களுக்கு தெரிவிக்க அரசு தவறிவிட்டது என Mr Andrews குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும் சிட்னியில் இருந்து திங்கட்கிழமை வரும் board 17 விமானத்தில் வரும் நியூசிலாந்தை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்துதல் அவசியம் இல்லை என அவர் கூறியுள்ளார்.

“சிறந்த சுகாதாரத்திற்கு தேவையான ஆலோசனையை வழங்குவோம். நாங்கள் bubble-ல் இருக்க விரும்பவில்லை என்றாலும் அனைத்து பகுதியிலும் அது பொருந்திவிட்டது” என்று திரு Andrews கூறினார்.

மேற்கு ஆஸ்திரேலியாவில் 23 பேரும் Tasmaniaவில் புதிதாக 5 நியூசிலாந்து பயணிகளையும் பெற்றுள்ளதாக அந்த நாட்டின் அதிகாரிகள் தெரிவித்தனர். பயணிகள் கட்டாய தனிமைப்படுத்துதலை கடைபிடிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இந்த ஏற்பாடுகளை மேலும் சிறப்பாக செய்யவே நாங்கள் விரும்புகிறோம். நடந்தவை எல்லாம் தங்கள் கட்டுப்பாடில் இல்லை என மேற்கு ஆஸ்திரேலிய Premier Mark McGowan தெரிவித்தார்.

நியூசிலாந்தில் இருந்து வந்த அணைத்து ஆஸ்திரேலியர்களும் தொடர்பு கொள்ளப்பட்டு மாநிலத்தில் நிலவும் கொரோனா தொற்று மற்றும் அதற்கான கட்டுப்பாடுகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக விக்டோரிய சுகாதாரத் துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த ஒரு வழி trans-Taman bubble, பயணிகளை இரண்டு வார தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தாமல் நியூசிலாந்தில் இருந்து NSW மற்றும் வடக்கு மாகாணத்திற்கு செல்ல அனுமதிக்க முடியாது.இதே நிபந்தணைகளின் கீழ் ஆஸ்திரேலியர்கள் நியூசிலாந்து செல்லவும் இயலாது