Breaking News

விக்டோரியாவின் Premier’s department secretary Chris Eccles திடீர் ராஜினாமா !

தனது தொலைப்பேசி பதிவுகள் ஹோட்டல் Quarantine விசாரணைக்கு ஒப்படைத்த பிறகு Department of Premier and Cabinet Secretary Chris Eccles திங்கட்கிழமை ராஜினாமா செய்தார்.

தனியார் பாதுகாப்பு காவலர்கள் quarantine ஹோட்டல்களில் பணியமர்த்தப்பட்ட நாள் அன்று திரு Eccles முன்னாள் விக்டோரிய தலைமை ஆணையர் Graham Ashton-உடன் பேசியதை அவர் ஒப்படைத்த பொறுப்புகள் உறுதி செய்து உள்ளது.

தனியார் பாதுகாப்பை பயன்படுத்துவது பற்றி எந்த முடிவும் நான் Mr Ashtonக்கு தெரிவிக்கவில்லை.அத்தகைய முடிவை தாம் எடுக்கவில்லை என்று திரு Eccles தெரிவித்தார்.

இரண்டு நிமிட உரையாடலில் திரு Ashton-ன் விசாரணைக்கு வழங்கப்பட்ட செய்திகளின் படி காவலர்களை பயன்படுத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டது தெளிவாக உள்ளது.

தனியார் பாதுகாப்பு காவலர்களைப் பயன்படுத்துவதற்கான திட்டம், மாநிலத்தில் இரண்டாவது கொரோனா பேரழிவு அலையை ஏற்படுத்தியதாக அனைவரும் நம்புகின்றனர். இதனால் பலர் பலியாகியுள்ளனர். நாடு கடும் ஊரடங்கை சந்தித்தது.

இதற்கு முன்னர் திரு Eccles இதே பணியை Labour and Liberal-led அரசிற்கு கீழ் உள்ள NSW மற்றும் SA வில் செய்து வந்தார். தான் தொடர்ந்து பதவியில் நீடித்தால் அது கவனத்தை திசை திருப்ப செய்வதாக இருக்கும் என திரு Eccles நினைக்கின்றார்.இறுதி முடிவை வாரியம் எடுக்கும் எனவும் அவர் கூறினார்.

இந்த ஆண்டில் ஏற்பட்ட பெரும் பிரச்சனையை சமாளிக்க பொதுத்துறை கடும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். நமது கவனம் அவர்கள் மேல் செல்லவேண்டுமே தவிர தன் மீது அல்ல என்று அவர் தெரிவித்தார்.திரு Eccles-ன் முடிவு அதிர்ச்சி அளிப்பதாக Premier Daniel Andrews தெரிவித்து உள்ளார்.

Ashton-உடன் பேசியது சந்தேகதுக்கு இடமின்றி நிரூபணம் ஆகியுள்ளது என திரு Ecclesr தெரிவித்தார்.
ஹோட்டல் quarantine திட்டத்தில் தனது துறையின் பங்கிற்காக கடந்த மாதம் சுகாதாரத் துறை அமைச்சர் Jenny Mikakos ராஜினாமா செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த விசாரணையின் இறுதியில் பதிலளித்த Mikakos, தனியார் காவலர்கள் பயன்படுத்துவது பற்றிய முடிவு யாரும் எடுக்கவில்லை என்பது நம்பும் படியாக இல்லை என்று அவர் தெரிவித்தார்.Retired Judge Jennifer Coate தலைமையில் நடந்த இந்த விசாரணையின் இறுதி அறிக்கை November 6-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.